ஸ்ருதியின் திருட்டுத்தனங்களை கண்டுபிடித்த தருண்.! வசமாக போட்டு கொடுத்த வருண்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் தொடரில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஸ்ருதி தான் கர்ப்பமாக இருப்பதாக இத்தனை நாட்கள் நாடகமாடி வந்தார். மேலும் மாடியிலிருந்து சக்தி தன்னை தள்ளி விட்டதால் அந்த கர்ப்பம் கலைந்து விட்டதாகவும், காதம்பரி ருக்மணியுடன் சேர்ந்து நாடகம் ஆடி வந்தார். இதை வீட்டிலுள்ள அனைவரும் நம்பிய நிலையில், ஒரு நாள் தனது அறையில் பாட்டை போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தார் ஸ்ருதி. இதை வேலைக்கார பெண் கவனித்து சக்தியிடம் கூற அவர் முதலில் நம்பவில்லை. பின்னர் ஸ்ருதியின் அறையில் காதம்பரி, ருக்மணி ஆகியோர் சேர்ந்து கர்ப்பம் ஆனதாக நாடகமாடிய விஷயத்தை சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அதையும் வேலைக்கார பெண்மணி கேட்டு சக்தியிடம் கூறுகிறார். இதனால் சந்தேகம் அடைந்த சக்தி ஸ்ருதிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்கிறார்.

ஸ்ருதியின் திருட்டுத்தனங்களை கண்டுபிடித்த தருண்.! வசமாக போட்டு கொடுத்த வருண்.! 1

அப்போது மருத்துவர் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை, கரு கலையவும் இல்லை, கர்ப்பமானது போல் நாடகம் ஆடினார் என்ற உண்மையை மருத்துவர் போட்டு உடைத்து விட்டார். இதனால் கோபமான சக்தி நேராக வீட்டிற்கு வந்து, ஸ்ருதியின் அறைக்கு சென்று, தங்கை என்று கூட பார்க்க மாட்டேன், கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். ஆனால் ஸ்ருதியோ சக்தியை பார்த்து, நீ பொய் சொல்கிறாய் என்று கூற, சக்தி உனக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை தற்போது பார்த்துவிட்டு தான் வருகிறேன். இந்த விஷயத்தில் போய் யாராவது பொய் சொல்வார்களா? உன்னை தங்கை என்று சொல்வதற்கே கேவலமாக இருக்கிறது. இனி இது போல் ஒரு தவறை செய்யாதே என்று எச்சரித்துவிட்டு செல்கிறார். இதையெல்லாம் அறையின் வெளியில் இருந்து வருண் அனைத்தையும் கேட்டு விடுகிறார். தனது தம்பி தருணிடம் ஸ்ருதி பற்றிய உண்மைகளை கூறுகிறார். அது பற்றிய இன்றைய எபிசோடின் முழு விவரங்களை பார்க்கலாம்.

இரவு அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது ஸ்ருதி அங்கு வரவில்லை, தருண் மட்டுமே அங்கு வருகிறார். உடனே வருண் ஸ்ருதியையும் அழைத்து வரலாம் அல்லவா? அவர் இங்கு வந்து அமர்ந்து நம்மையெல்லாம் பார்த்து பேசினால் அவருக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு தருண் வேண்டாம் என்று மறுக்க, மனோகர் ஸ்ருதியை அழைத்து வருமாறு கூறுகிறார். உடனே வேலைக்கார பெண் சென்று ஸ்ருதியை உணவு அருந்தும் இடத்திற்கு அழைத்து வருகிறார். ஸ்ருதியும் சாப்பிட அமருகிறார். அப்போது சக்தி தனக்கு பரிமாறக்கூடாது என்று ஸ்ருதி முகத்தில் அடித்தார் போல் கூற, வருணுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உடனே ஸ்ருதி பற்றிய உண்மைகளை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கோபமாக தெரிவிக்கிறார் வருண். ஸ்ருதி கர்ப்பமாகவே இல்லை இல்லாத குழந்தையை கலைந்து விட்டதாக கூறி நாடகமாடி சக்தியை மனதை நோகடித்து விட்டதாக வரும் குற்றம் சாட்டுகிறார். அப்படி உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் ஸ்ருதிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை சென்று பார்க்கலாம் என்றும் வருண் கூறுகிறார்.

இதனால் மனோகர் மற்றும் தருண் அதிர்ந்து போகின்றனர். தருண் ஸ்ருதியை பார்த்து நீ உண்மையிலேயே என்னை காதலித்து தானே திருமணம் செய்து கொண்டாய்? உண்மையை சொல் என்று கேட்க, முதலில் ஸ்ருதி மறுக்கிறார். சக்தி தம்மை பிரிப்பதற்காக இப்படி நாடகமாடுகிறார் என்று கூறுகிறார். பின்னர் மருத்துவரிடம் சென்று உண்மைகளை கேட்கலாமா என்று தருண் கேட்க, ஸ்ருதி அழுது கொண்டே என்னை மன்னித்து விடுங்கள் என்று தருணிடம் கூறுகிறார். இதனால் மணமுடைந்து போன தருண், சாப்பிடாமல் எழுந்து நேராக மாடிக்கு செல்கிறார். பின்னாலே செல்லும் ஸ்ருதியிடம் அவர் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார். நானும் என் குடும்பமும் உனக்கு என்ன துரோகம் செய்தோம்? ஏன் இப்படி எங்களை பழிவாங்குகிறாய்? இந்த குடும்பத்தை பழி வாங்குவதற்கு தான் இப்படி என்னை திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டிற்கு வந்தாயா?என்று கடுமையாக கேட்கிறார்.

மேலும் மருத்துவர் அறையிலிருந்து தன்னை வெளியேற்றியபோதே தனக்கு சந்தேகம் வந்ததாகவும், உன்னை கீழே தள்ளி விடும்போது உனது தாத்தா தடுக்காமல் வீடியோ எடுத்த போது ஏன் தடுக்காமல் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தீர்கள் என்று எனக்கு கேட்கத் தோன்றியது, ஆனால் நான் கேட்கவில்லை, ஏனென்றால் நான் உன்னை மனதார நம்பினேன் என்று தருண் ஸ்ருதியிடம் கூறுகிறார். மேலும் இந்த விஷயத்தில் யாராவது பொய் சொல்லுவார்களா? நாம் இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்கவில்லை, ஆனால் எப்படி குழந்தை உருவானது என்று யோசித்தேன். இருந்தபோதிலும் உன்னை மனதார நம்பினேன். அதற்கு நீ எனக்கு இப்படி துரோகம் செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை என்று கோபத்தின் உச்சைக்கு சென்று தலையைப் பிடித்துக் கொண்டு கத்துகிறார் தருண். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது ஸ்ருதியை வீட்டை விட்டு வெளியேற்றுவார்களா? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Youtube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்