ஸ்ருதிக்கு பெரிய ஆப்பு.! இனிமே ஷக்தி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.! தரமான செய்கை மனோகர்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் சக்தியின் மாமனார் மனோகர், சக்தியிடம் அனைத்து பொறுப்புகளையும், வீட்டின் அனைத்து சாவிகளையும் ஒப்படைத்து இருக்கிறா.ர் மௌன ராகம் சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை நவீனா நடித்து வருகிறார். தற்போது கதையின்படி வருணுக்கு கொடுக்கப்பட்டு வரும் மாத்திரைகளின் உண்மைகளை சக்தியை கண்டுபிடித்து விட்டார். இதை மனோகரிடம் சொல்லி பெரிய பிரச்சினையே கிளம்பிவிட்டது. வருணக்கு இத்தனை நாட்களாக அவரது அத்தை ஷீலா தான் மாத்திரை கொடுத்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிக்கு பெரிய ஆப்பு.! இனிமே ஷக்தி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.! தரமான செய்கை மனோகர்.! 1

ஆனால் ஷீலா பழிவாங்கும் நோக்கத்தில் உண்மையான மாத்திரைகளை கொடுக்காமல், நரம்பு மண்டலம் பாதிக்கும் மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்ட மனோகர் ஷீலாவின் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டார். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இத்தனை நாட்களாக வீட்டின் பொறுப்புகளை கவனித்து வந்த ஷீலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதால், அந்த பொறுப்புகளை சக்தியிடம் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறார் மனோகர். வீட்டில் நகைகள் இருக்கும் பீரோ சாவிகள், பேங்க் லாக்கர் சாவிகள் என அனைத்தையும் சக்தியிடம் ஒப்படைக்கிறார். இதை பார்த்த ஸ்ருதி கோபத்தில் இருக்கிறார். ஆனால் சக்தியோ இதை பெரிய பொறுப்பாக கருதி சாவிகளை வாங்க மறுக்கிறார்.

இருந்தாலும் மனோகர் விடாப்பிடியாக சாவிகளை சக்தியிடம் ஒப்படைக்கிறார். இதனால் சக்தியின் மீது இன்னும் ஸ்ருதிக்கு கோபம் அதிகம் ஆகும், இன்னும் பல வில்லத்தனங்களை செய்வார். அதன்படியே கதை நகரும்.. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the video below..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்