விஜய் டிவியில் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மௌன ராகம். இந்த தொடருக்கு பல ரசிகர்கள் உண்டு. மௌன ராகம் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், தற்போது பாகம் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதையின் படி ஹீரோ கார்த்திக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் குழந்தை சக்தி தனது தந்தையை தேடி சென்னைக்கு வந்து, இறுதியில் தனது தந்தை வீட்டிலேயே தஞ்சம் புகுந்து விடுகிறது. அந்த குழந்தை முதல் மனைவிக்கு பிறந்த்து என்று கார்த்திக்கின் இரண்டாவது மனைவி காதம்பரி கண்டுபிடித்து விடுகிறார். பின்னர் காதம்பரி அந்த குழந்தையை எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்? மீண்டும் அந்த குழந்தை தந்தையிடம் சேருமா? என்பது குறித்த கதை தான் மௌன ராகம். தற்போது பாகம் இரண்டில் இந்த குழந்தைகள் வளர்ந்து அண்ணன், தம்பி இதுவரை திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இந்த கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இதில் அண்ணன் வருணை கார்த்திக் மூத்த மனைவியின் குழந்தையான சக்தியும், தம்பி தருணை ஹீரோவின் இரண்டாவது மனைவி காதம்பரியின் குழந்தையான ஸ்ருதியும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கதையின்படி வருணுக்கு அம்மா கிடையாது, அவர் ஒரு தீ விபத்தில் மரணம் அடைந்து விடுகிறார். அதனால் வருணுக்கு நெருப்பை பார்த்தாலே பயம் ஏற்பட்டு விடுகிறது. பயத்தில் அலறி அவருக்கு மயக்கம் வரும் அளவிற்கு நெருப்பை பார்த்தாலே வருணுக்கு ஆகாது. இதனால் வருணை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர். வெகு நாட்களாக அவர் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இந்த மருந்து மாத்திரைகளை அவருக்கு வருணின் அத்தையான ஷீலா தான் கொடுத்து வருகிறார்.
ஆனால் ஷீலா உண்மையில் நல்லவர் கிடையாது. அவர் தனது சொந்த அண்ணன் மகனே உடல்நலம் சரியாகி விடக்கூடாது என்று தீய எண்ணத்துடன் அவருக்கு வேறு மாத்திரைகளை வழங்கி வருகிறார். குறிப்பாக தூக்க மாத்திரையும், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மாத்திரைகளையும் அவர் இத்தனை காலமாக கொடுத்து வந்திருக்கிறார். இதை வருணன் மனைவியான சக்தி தற்போது கண்டுபிடித்து அதை மருத்துவரிடம் சென்று கேட்கிறார். மருத்துவர் தான் இந்த மாத்திரைகளை வழங்கவே இல்லை, இது தூக்க மாத்திரைகள், மேலும் இன்னொரு மாத்திரை நரம்பு மண்டலத்தையே பாதிக்க கூடிய அளவிற்கு மோசமான மாத்திரை என்று கூற சக்தி அதிர்ச்சியில் உறைகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television