மௌன ராகம் சீரியலில் ஸ்ருதி, தான் கர்ப்பமாக இருப்பதாக தருணிடம் தெரிவிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. மௌன ராகம் சீரியல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விறுவிறுப்பான தொடர்களில் ஒன்று. சீசன் ஒன் கொடுத்த வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் வருண் – சக்தி கதாபாத்திரங்களும், தருண் – ஸ்ருதி கதாபாத்திரங்களும் நாடகத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றனர். தற்போது மௌன ராகம் கதையின்படி வருணுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளை கண்டறிந்து வருணின் அத்தை ஷீலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் மனோகர். மேலும் வீட்டின் பொறுப்புகள் அனைத்தையும் சக்தியிடம் கொடுத்துவிட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மேலும் வீட்டின் எஜமானியே நீதான் எனவும், நீ சொல்வது தான் இந்த வீட்டில் சட்டம் என்று சக்திக்கு ஏக அதிகாரத்தை கொடுத்து விட்டார் மாமனார் மனோகர். இந்த நிலையில் சக்தியை பழிவாங்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. கோபத்துடன் தன் அறைக்கு திரும்பியபோது அங்கு தருண் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் தனம் கர்ப்பமாக இருப்பதை மூர்த்தியிடம் சொல்லும் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து தருண் கண்கலங்குகிறார். உடனே ஸ்ருதி என்ன ஆனது என்று கேட்க, ஒன்றும் இல்லை இந்த சீரியலை பார். ஒரு பெண் கர்ப்பமானதை ஒரு ஆணிடம் எவ்வளவு அழகாக சொல்கிறார் என்று ஸ்ருதியிடம் கூறுகிறார். உடனே ஸ்ருதிக்கு மனதில், இவருக்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் போல எனவே அதை வைத்து நாம் காய்களை நகர்த்தலாம் என திட்டமிடுகிறார்.
மேலும் உடனே பாத்ரூமுக்கு சென்று வாந்தி எடுப்பது போல் நாடகமாகிறார். வெளியே வந்த அவரிடம் என்ன ஆனது என்று தருண் கேட்ட, நீங்கள் அப்பாவாக போகிறீர்கள் என்று ஸ்ருதி பதிலளிக்கிறார். ஆனால் கருணை தன் பக்கம் வளைப்பதற்காக ஸ்ருதி நாடகமாடுகிறார் என்பது தெரியாமல் தருணும் ஸ்ருதியை கட்டி அணைக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண… Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television