மௌன ராகம் தொடரில் தற்போது குலதெய்வத்துக்கு வைத்து இருந்த அனைத்து நகைகளும் காணாமல் போய் விட்டது. இதனால் சக்தி நிலை குலைந்து நிற்கிறார். மௌனராகம் தொடர் முதல் சீசன் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் கதையின் நாயகர் கார்த்திக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். முதல் மனைவி இறந்து விட்டதாக நினைத்து இரண்டாவதாக காதம்பரியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் முதல் மனைவியும் அவருக்கு பிறந்த பெண் குழந்தையும் உயிருடன் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் கதாநாயகனுடன் இணைந்து விடுகிறார்கள். ஆனால் இது இரண்டாவது மனைவி காதம்பரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் மூத்த மனைவி மற்றும் அவரது மகளை வெறுத்து வருகிறார். அவர்கள் இருவரையும் கொலை செய்ய கூட காதம்பரியின் குடும்பம் திட்டம் தீட்டி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூத்த மனைவியின் மகள் சக்தி வருண் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவரது தம்பி தருணை, கார்த்தியின் இரண்டாவது மனைவி காதம்பரியின் மகள் சுருதி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் தொடர்ந்து கார்த்திக் வீட்டில் சண்டை சச்சரவு என்று இருந்து வருகிறது. காதம்பரியின் குடும்பம் எப்படியாவது கதாநாயகன் கார்த்திக்கிடமிருந்து மூத்த மனைவியை பிரித்து விட வேண்டும் என்று எண்ணி பல தீய செயல்களை செய்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு திருப்பங்களுடன் நடந்து வரும் இந்த தொடரில் இவ்வளவு நாள் காணாமல் போய் இருந்த வருணின் அம்மா திரும்பி வந்து விட்டார். ஸ்ருதி சக்தி பற்றி வருணின் அம்மாவிடம் தப்பு தப்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் வருணின் அம்மாவிற்கு சக்தி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் சக்தியை அவர் மிகவும் மரியாதையுடன் நடத்துகிறார். சமையல் தொடங்கி அனைத்திலும் ஸ்ருதியை காட்டிலும் சக்தியே வீட்டில் உள்ள அனைவரிடமும் பாராட்டுகளை பெறுகிறார்.
இந்த நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து குலதெய்வ கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்பு அம்மனின் நகைகள் வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அந்த பொறுப்புகள் அனைத்தையும் சக்தி மாமியார் சக்தியிடம் கொடுக்கிறார். இதனால் ஸ்ருதி மிகுந்த கோபத்துடன் சக்தியை வெறி கொண்டு பார்க்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அப்போது சக்தியிடம் அவரது மாமியார் நகைகளை எடுத்து வருமாறு கூறுகிறார். காரில் சென்று பார்த்த போது நகைகளை காணவில்லை.நகைகளை கூட பாத்துக்க முடியல, இவளிடம் போய் ஸ்கூல் பொறுப்பை கொடுத்து இருக்கீங்களே என்று கோபத்தில் மாமியார் கத்துகிறார். இதனால் சக்தி கதறி அழுகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் 3 நாட்களில் நகையை கண்டுபிடித்து தருகிறேன் என்று வருண் சக்திக்கு வாக்கு கொடுத்து இருக்கிறார். இதனால் விரைவில் ஸ்ருதி மாட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
YouTube Video Embed Code Credits: Vijay Television