மீண்டும் கார்த்தி வீட்டுக்கு வந்த காதம்பரி.! சம்பவம் செய்துவிட்ட மல்லிகா.! பங்கம் பண்ணிடீங்க.!

வெளியிட்டது

மௌன ராகம் தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் நடந்து வருகிறது. காதம்பரி மீண்டும் கார்த்தியின் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு வந்து மல்லிகாவை பார்த்து வீட்டை விட்டு வெளியே போ என்று கூற கடுப்பான மல்லிகா, நான் ஏன் வெளியே போக வேண்டும் நீ சொல்வதையெல்லாம் நான் செய்ய முடியாது என்று காட்டமாக பதில் அளிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இதில் கதாநாயகன் கார்த்திக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவிதான் மல்லிகா. இரண்டாவது மனைவி காதம்பரி. இதில் மூத்த மனைவி இறந்து விட்டதாக நினைத்து அவர் காதம்பரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார். ஆனால் மூத்த மனைவி ஒரு கிராமத்தில் தனது மகள் சக்தியுடன் வசித்து வருவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கார்த்தி வீட்டுக்கு வந்த காதம்பரி.! சம்பவம் செய்துவிட்ட மல்லிகா.! பங்கம் பண்ணிடீங்க.! 1

ஒரு கட்டத்தில் கிராமத்தில் இருந்து சக்தி தனது தந்தையை தேடி சென்னைக்கு வர பின்னர் அது கார்த்தி வீட்டிலேயே தஞ்சம் அடைகிறது. அந்த குழந்தை தன்னுடைய குழந்தை தான் என்பதை தெரிந்துகொள்ளும் கார்த்தி, அதற்கு பரிவு காட்டி வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் மல்லிகாவும் உயிருடன் இருக்கும் விஷயம் கார்த்திக்கு தெரிய வருகிறது. பின்னர் மல்லிகாவுக்கும் காதம்பரிக்கும் சண்டை தொடங்குகிறது. மல்லிகா குடும்பத்தை எப்படியாவது பழி வாங்கி அவர்களை கார்த்க்கிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று காதம்பரியும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து திட்டம் திட்டி வந்தனர். இத்துடன் சீசன் முடிந்தது. இந்த நிலையில் தற்போது மௌன ராகம் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது இந்த கதையில் சக்தி வளர்ந்து வருண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது தம்பி தருணை காதம்பரியின் மகள் ஸ்ருதி திருமணம் செய்து கொண்டார். இதனால் கதை இன்னும் சுவாரசியமாகி கொண்டே வந்தது.


இந்த நிலையில் கார்த்தி்காதம்பரி செய்யும் மோசமான செயல்களை தெரிந்து கொண்டு அவரை குடும்பத்திலிருந்து விலக்கி வைத்தார். தற்போது கதைப்படி கதம்பரியின் தந்தை விஸ்வநாதன் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். எனவே காதம்பரியும் அவரது தாய் ருக்மணியும் தனி மரம் ஆகிவிட்டனர். இதனால் மீண்டும் கார்த்திக்குடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து கார்த்திக் வீட்டுக்கு காதம்பரி செல்கிறார். அங்கு செல்லும் அவர் மல்லிகாவை பார்த்து இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று கோபமாக கூற நீ சொல்வதற்கெல்லாம் நான் வெளியே போக முடியாது என்று செம கெத்தாக பேசுகிறார் மல்லிகா. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

janYoutube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்