மௌனராகம் தொடரில் தற்போது நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துவிட்டது. ஸ்ருதி சக்தியிடம் மன்னிப்பு கேட்டு இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். நெகிழ்ச்சியான தருணங்களுடன் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது மௌன ராகம். இந்த தொடர் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் 2வில் ரவீனா தாஹா, ஷில்பா, ராகுல், சல்மான் சிப்பி ரஞ்சித் என பலரும் நடித்து வருகின்றனர். இதில் சக்தியாக ரவீனாவும் கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜு பரமேஸ்வரன், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித்தும், ஸ்ருதியாக ஷில்பாவும் நடித்து வருகின்றனர். இதில் அண்ணன் தம்பிகளாக சல்மான் வருணாகவும், ராகுல் தருணாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்றால் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனடியாக உடைத்து விட்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விடும். ஒரே இடத்தில் தேய்ந்த ரெகார்ட் போன இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர். தற்போது கதைப்படி ஸ்ருதி தன்னுடைய அப்பா கார்த்திக் கிருஷ்ணா இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். சக்தியின் அத்தை சொர்ணம் DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்து வந்து ஸ்ருதியிடம் கொடுத்து நீ கார்த்திக் கிருஷ்ணாவுக்கு பிறந்த பிள்ளையே இல்லை என்று கூறுகிறார். இதனால் மனம் உடைந்த ஸ்ருதி அதை டாக்டரிடம் எடுத்து செல்கிறார். அவரும் அந்த ரிப்போர்ட் உண்மை என்று கூற மனம் நொந்து போன ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியேறிவிடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஸ்ருதியை தேடி அலைகின்றனர்.
தற்போது ஸ்ருதியை சக்தியும் வருணும் கண்டுபிடித்து விட்டனர். அப்போது ஸ்ருதியிடம் எனக்கு எல்லாம் முன்பு இருந்தே தெரியும் என்று சக்தி கூறுகிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடையும் ஸ்ருதி எல்லாம் தெரிந்து இருந்தும் நான் செய்த கொடுமை எல்லாம் ஏன் தாங்கி கொண்டு இருந்தாய் என்று கேட்கிறார். அதற்கு சக்தி ஏன்னா நீ என் தங்கச்சி என்று பதில் சொல்கிறார் சக்தி.! இதனால் நெகிழ்ந்து போன ஸ்ருதி என்ன மன்னிச்சிடு சக்தி என்று சொல்லி சக்தியை கட்டிப்பிடித்து அழுகிறார். விரைவில் மௌனராகம் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் தற்போது இந்த ப்ரோமோ அதை உறுதி செய்துள்ளது. நெகிழ்ச்சியான அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television