மௌனராகம் தொடரில் தற்போது நாம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதி தருணம் வந்துவிட்டது. கதம்பரியை சக்தியுடன் இருக்க வைத்துவிட்டு மல்லிகா வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற நெகிழ்ச்சியான தருணங்களுடன் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது மௌன ராகம். இந்த தொடர் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீசன் 2வில் ரவீனா தாஹா, ஷில்பா, ராகுல், சல்மான் சிப்பி ரஞ்சித் என பலரும் நடித்து வருகின்றனர். இதில் சக்தியாக ரவீனாவும் கார்த்திக் கிருஷ்ணாவாக ராஜு பரமேஸ்வரன், மல்லிகாவாக சிப்பி ரஞ்சித்தும், ஸ்ருதியாக ஷில்பாவும் நடித்து வருகின்றனர். இதில் அண்ணன் தம்பிகளாக சல்மான் வருணாகவும், ராகுல் தருணாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை மக்கள் விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம் என்றால் ஏதாவது ஒரு திருப்பம் என்றால் அதை உடனடியாக உடைத்து விட்டு கதை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விடும். ஒரே இடத்தில் தேய்ந்த ரெகார்ட் போன இல்லாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர். தற்போது கதைப்படி ஸ்ருதி தன்னுடைய அப்பா கார்த்திக் கிருஷ்ணா இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். சக்தியின் அத்தை சொர்ணம் DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எடுத்து வந்து ஸ்ருதியிடம் கொடுத்து நீ கார்த்திக் கிருஷ்ணாவுக்கு பிறந்த பிள்ளையே இல்லை என்று கூறுகிறார். இதனால் மனம் உடைந்த ஸ்ருதி அதை டாக்டரிடம் எடுத்து செல்கிறார். அவரும் அந்த ரிப்போர்ட் உண்மை என்று கூற மனம் நொந்து போன ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியேறிவிடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் ஸ்ருதியை தேடி அலைகின்றனர்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்ருதி கார்த்திக்கிடம் நான் உங்கள் பிள்ளை இல்லை என்று தெரிந்தும் ஏன் என்னை இவ்வளவு பாசம் காட்டி வளத்தீர்கள் என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கார்த்திக் உறைந்து போய் நிற்கிறார். மேலும் காதம்பரி நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகிறோம் என்று பேட்டி படுக்கையுடன் வந்து கூறுகிறார். ஆனால் மல்லிகாவோ நீங்கள் எதற்கு வெளியே போக வேண்டும் நான் வெளியே போகிறேன் என்று சொல்லி மல்லிகா பேட்டி படுக்கையுடன் வெளியே செல்ல முடிவெடுக்கிறார். இதனால் கார்த்திக் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை. இந்த மாத இறுதிக்குள் மௌனராகம் தொடர் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் தொடரை ஏன் முடிகிறீர்கள் என்று ரசிகர்கள் சோகத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். நெகிழ்ச்சியான அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television