ரூமில் பாட்டு போட்டு குத்தாட்டம் போட்டு கொண்டிருந்த ஸ்ருதி.! உள்ளே என்ட்ரி கொடுத்த சக்தி

வெளியிட்டது

விஜய் டிவியில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் மௌன ராகம். இந்தத் தொடர் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. சீசன் 2வில் அண்ணன் தம்பிகள் வருண் தருணை அக்கா தங்கைகளான சக்தி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் சக்தியும் ஸ்ருதியும் வெவ்வேறு தாய்க்கு பிறந்த பிள்ளைகள். ஆனால் அவர்களின் தந்தை ஒருவர் தான். சக்தி மீது அனைவரும் பாசமாக இருப்பதை பார்த்து வளரும் ஸ்ருதி, சிறு வயதிலிருந்து சக்தி மீது வெறுப்பு கொள்கிறார். சக்தியை அண்ணன் வருண் திருமணம் செய்து கொண்ட பிறகு, தம்பி தருணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டு, அதே வீட்டில் மருமகளாகி விடுகிறார் ஸ்ருதி.

ரூமில் பாட்டு போட்டு குத்தாட்டம் போட்டு கொண்டிருந்த ஸ்ருதி.! உள்ளே என்ட்ரி கொடுத்த சக்தி 1

திருமணம் ஆகி உள்ளே வந்த பிறகு வருணின் அத்தையான ஷீலாவுடன் சேர்ந்து சக்தியை கொடுமைப்படுத்தி வருகிறார் ஸ்ருதி. ஒரு கட்டத்தில் ஷீலா செய்யும் திருட்டு வேலைகளை கண்டுபிடித்து அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார் வருணின் தந்தை மனோகர் இதன்பிறகு தனி ஆளாக இருந்து சக்தியை கொடுமைப்படுத்தி வந்தார் ஸ்ருதி. குறிப்பாக தான் கர்ப்பமாக இருப்பதாக இத்தனை நாட்கள் நாடகம் ஆடி வந்தார். இதனால் ஸ்ருதி சக்தியை விழுந்து விழுந்து கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஸ்ருதி தான் கர்ப்பமாக இல்லை இல்லை என்பது வீட்டில் உள்ள யாருக்காவது தெரிந்தால் தன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என்று அஞ்சுகிறார். ஸ்ருதியின் பாட்டி கீழே விழுந்து கர்ப்பம் கலைந்ததாக நாடகம் ஆடுமாறு ஸ்ருதியிடம் கூறுகிறார். அதுவும் சக்தி தள்ளிவிட்டு மாடியில் இருந்து விழுந்தது போல் நாடகம் ஆடுமாறு அவரிடம் கூறுகிறார்.

பாட்டி சொல்லை அப்படியே தட்டாமல் சக்தி தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டு தனக்கு கர்ப்பம் கலைந்து விட்டதாக ஸ்ருதி நாடகம் ஆடி வருகிறார். இதை தருணும் நம்பி விடுகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சுருதிக்கு ஜூஸ் கொடுப்பதற்காக வீட்டின் வேலைக்கார பெண் அவரது அறைக்கு செல்கிறார். ஆனால் அங்கு அவர் பாட்டை போட்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்துவிட்டு கீழே வந்த வேலைக்கார பெண் அபார்ஷன் ஆகிவிட்டது என்று சொன்னீர்கள், அவர் பாட்டு போட்டு ஆடிக் கொண்டிருக்கிறார் என்று சக்தியிடம் கூறுகிறார். உடனே ஸ்ருதியின் அறைக்கு செல்லும் சக்தி கதவை திறந்து பார்த்தபோது அவர் அங்கு பாட்டு போட்டு குத்தாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ தெறியாக இருக்கிறது. ஸ்ருதி வசமாக மாட்டுவார் என்று தெரிகிறது. இந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்