Categories: சினிமா

பூனை என நினைத்து புலியை வளர்க்கும் புகழ்.! மாறுபட்ட கதையுடன் ‘Mr. Zoo Keeper’ ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

சின்னத்திரை பிரபலம் புகழ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் மூலமாக முதன்முறையாக அவர் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் புகழ். விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமானவர் புகழ். கடலூரைச் சேர்ந்த இவர் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டார். ஆரம்பத்தில் சிறு சிறு வேலைகள் பார்த்து வந்த அவருக்கு, விஜய் டிவியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூனை என நினைத்து புலியை வளர்க்கும் புகழ்.! மாறுபட்ட கதையுடன் ‘Mr. Zoo Keeper’ ட்ரைலர் வெளியானது.! 1

‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’, ‘சிரிச்சாப் போச்சு’ போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து காமெடி செய்து வந்தார் புகழ். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது ‘குக் வித் கோமாளி’ தான். கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து அசத்தி வருகிறார் புகழ். முதல் முறையாக அவர் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் விரைவில் வெளியாகி இருக்கிறது. அதற்கான ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஜே சுரேஷ் என்பவர் எழுதி, இயக்கும் இந்த படத்தை ஜெபா ஜோன்ஸ் மற்றும் ராஜரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் புகருடன் இணைந்து நடிகை ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம் புலி, மாரிமுத்து, இமான் அண்ணாச்சி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக பல நாட்களாக ஆப்பிரிக்காவில் தங்கி இருந்த புகழ் உண்மையான விலங்குகளுடன் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: U1 Records

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்