நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங. தோனி கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை யோகி பாபுவே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்கிற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக பணியாற்றி பின்னர் வெள்ளி திரைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் யோகி பாபு. இவர் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் அறிமுகமாகி நடித்து வந்தார். “பன்னி மூஞ்சி வாயன்” என்கிற காமெடியில் பிரபலமானதை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தியிருக்கிறார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு போட்டியாக நடிக்க தொடங்கினார். இவர் அடிக்கும் கவுண்டர்களும், டைமிங் காமெடிகளுக்காகவே பலரும் யோகி பாபுவை ரசிக்க தொடங்கினர். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாகவும் களமிறங்கினார். 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா திரைப்படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் இவர் கோலமாவு கோகிலா என்கிற படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி திரைப்படமும் யோகி பாபுவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகனாகவும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி யோகி பாபுவிற்கு கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
அதில் பெஸ்ட் விஷஸ் யோகிபாபு என்று சொல்லி மகேந்திர சிங் தோனி கையெழுத்திட்ட பேட்டை பரிசாக அளித்திருக்கிறார் ்இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த யோகி பாபு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இந்த கிரிக்கெட் பேட்டை வழங்கியதற்கு நன்றி, மிக்க மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார். யோகி பாபு ஏற்கனவே கால்பந்து விளையாட்டு வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல அவர் கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகமாக உள்ளவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வரும் யோகி பாபு தற்போது எம் எஸ் தோனி இன் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கும் முதல் திரைப்படம் ஆன எம் ஜி எம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.