Categories: உலகம்

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 12 வது இடத்தை பிடித்துள்ளார்!!

வெளியிட்டது
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 12 வது இடத்தை பிடித்துள்ளார்!! 1

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மதிப்பு உயர்ந்து வருகிறது , அதன் சந்தை மூலதன மதிப்பு நேற்று 10 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. இதன் மூலம் அந்நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்கள் பட்டியலில் 6ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதேபோல, 59.4 பில்லியன் டாலர்கள் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் பில்கேட்ஸ், ஜெஃப் பெசோஸ், பெர்னார்டு அர்னால்ட், வாரன் பஃபெட், மார்க் ஜுக்கர்பெர்க் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் விப்ரோ அதிபர் அசீம் பிரேம்ஜி 56ஆவது இடத்திலும், ஹெச்.சி.எல். ஷிவ் நாடார் 84ஆவது இடத்திலும் உதய் கோட்டக் 98ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்