Categories: சமூகம்

இனஅழிப்பின் விளிம்பில் காஷ்மீரும், அசாமும் !

எண்ணற்ற சர்வதிகாரத்தையும், கொடுமையான இனப்படுக்கொலைகளையும் வரலாறு கண்டிருக்கிறது. இனப்படுகொலையில் உள்ள படிநிலைகளின் வகைப்பாடுகள் குறித்து அமெரிக்க பேராசிரியர் கிரிகோரி ஸ்டாண்டன், 1996ஆம் ஆண்டில் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையின் போது வெளியிட்டார்.

இனஅழிப்பின் விளிம்பில் காஷ்மீரும், அசாமும் ! 1

தற்போது இந்தியாவில் நடந்தேறி வரும் சூழல்கள் அனைத்தும் இனப்படுக்கொலைகளுக்கான முன்னேற்பாடாக இருக்கிறதென, கிரிகோரி ஸ்டாண்டன் தெரிவித்துள்ளார்.

“அசாம் மற்றும் காஷ்மீரில் வாழும் முஸ்லீம் மக்கள் துன்புறுத்தப்படுவது இனப்படுகொலைகளுக்கான முந்தையை படிநிலையில் இருக்கிறது. அடுத்த படிநிலை இன அழிப்பாகும். இந்தியாவின் பிரதமரான மோடியின் அரசாங்கம் நாஜி ஆட்சியின் அனைத்து அடையாளங்களும் இருக்கிறது. தேசியவாதம் என்பதை தீவிர தன்மைக்கு எடுத்து செல்லுவது பாசிசம் மற்றும் நாசிசம் போக்குக்கு இழுத்து செல்லும்” என தெரிவித்தார்.

அதேபோல, இந்திய ஆர்வலர் டீஸ்டா சீட்டல்வாட், “என்.ஆர்.சி சட்டம் முஸ்லீம்களுக்கு பாகுபாடு காட்டியுள்ளது. மேலும், அசாமில் மனித உரிமைகளைத் தகர்தெறியவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டமானது மொழி சமூகங்களிடையே வெறுப்பை உண்டாக்கவும், வெவ்வேறு இனங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தவும் மோடி பயன்படுத்துகிறார். மேற்கு வங்கம், மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் அமைதியைக் குலைப்பதற்கும், அமைதியின்மையை உருவாக்குவதற்கும் இனம் சார்ந்த வெறியை மோடி உருவாக்குகிறார்” என குற்றசாட்டியுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்