உனக்கு நான் எப்போ டி தாலி கட்டுனேன்? அஞ்சலியை அலறவிட்ட பூமிநாதன்.! வேற லெவல் ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு நான் எப்போ டி தாலி கட்டுனேன்? அஞ்சலியை அலறவிட்ட பூமிநாதன்.! வேற லெவல் ப்ரோமோ 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியல் வித்யாசமான கதையம்சம் கொண்டது. இந்த சீரியலில் ஹீரோவாக இருக்கும் பூமி நாதனுக்கு முத்தழகு மற்றும் அஞ்சலி என்கிற இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். பூமிநாதனின் தாயார் பேச்சியம்மாள் ஊரில் பெரிய தலைவராக இருக்கும் நிலையில் அவர் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அங்கு மாப்பிள்ளை திருடன் என்பதை தெரிந்து கொள்ளும் பேச்சியம்மாள் தனது மகன் பூமிநாதனை அந்த பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கிறார்.

முத்தழகை திருமணம் செய்து கொள்வதில் பூமிநாதனுக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. இருந்த போதிலும் தற்போது முத்தழகை அவருக்கு மிகவும் பிடித்த போயிருக்கிறது. முத்தழகு உடன் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையில் பூமிநாதனின் காதலியான அஞ்சலியும் பூமியும் தானும் காதலித்த போது தன்னுடைய கழுத்தில் பூமி தாலி கட்டியதாக பொய் சொல்லி ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த சீரியலை வசைப்பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்தழகும் அஞ்சலியும் இருவரையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர். பூமி யார் கழுத்தில் தாலி கட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருமணத்திற்காக அஞ்சலி மற்றும் முத்தழகு இருவருக்கும் புடவை எடுத்துக் கொடுக்கின்றனர். ஆனால் அஞ்சலி முத்தழகுக்கு புடவை எடுத்துக் கொடுக்கக் கூடாது என்று சொல்லி பூமியுடன் சண்டை போடுகிறார். ஆனால் பூமி அஞ்சலியின் எதிர்ப்பையும் மீறி முத்தழகிற்கு புடவை எடுத்துக் கொடுக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்தழகுக்கு புடவை எடுத்துக் கொடுத்த விஷயத்தை தெரிந்து கொண்டு பூமியிடம் அஞ்சலி சண்டை போடுகிறார். அப்போது நான் முத்தழகை கட்டாயத்தின் பெயரில்தான் திருமணம் செய்து கொண்டேன், ஆனால் உனக்கு நான் எப்பொழுது தாலி கட்டினேன்? என்று கூறு பார்க்கலாம் என்று கேட்கிறார். இதனால் அஞ்சலி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்