திறமைகள் இருக்கும் இடத்திலேயே கலை வளரும். பல ரியாலிட்டி ஷோக்கள் நடக்கிறன. சிறப்பாக படக்கூடியர்வரகள், ஆடக்கூடியவர்கள், காமெடி செய்ய கூடியவர்கள் என பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு போட்டிகளை நடத்துகிறார்கள். பலர் வென்றும் இருக்கிறார்கள். ஆனால் இதில் முக்கியமான விஷயம் இதில் எத்தனை பேர் அங்கிருந்து கலைத்துறையில் வெற்றி கோடி நாடி உள்ளார்கள் என்பதே. சிலர் அந்த சாதனையை செய்து காட்டினாலும் பலர் காணாமலே போயுள்ளார்கள்.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீனியர், சூப்பர் சிங்கர் ஜூனியர் என இரண்டு பாட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதில் எத்தனையோ நபர்கள் வென்றுள்ளார்கள். கடந்த ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் கானா பாடகர்கள் மக்கள் அனைவரையும் கவர்ந்தார் பாடகர் முத்து சிற்பி. நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் இவர் நன்கு திறமை கொண்டிருந்தார்.
ரசிகர்கள் பலரும் இவரே அந்த முறை போட்டியில் வெல்வார் வெல்வார் என எதிர்பார்த்தனர். ஆனால் அவரால் கடைசி வரை சென்று 4வது இடமே பிடிக்க முடிந்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றார். இதனை அடுத்து முத்துச்சிற்பி ஏற்கனவே ஒரு சில திரைப் படங்களில் பாடியிருக்கிறார். தற்போது தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையில் உருவாகும் படத்தில் முத்துச்சிற்பிக்கு பாடும் வாய்ப்பை அளித்து உள்ளார்.
இசை அமைப்பாளர் இமான் தற்போது நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் “காரி” படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து சிட் ஸ்ரீராம் பாடிய “சாஞ்சிக்காவ” பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.அந்த பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை இமான் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே முத்துசிற்ப்பிக்கு வாய்ப்பு அளிப்பேன் என இமான் வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இமான் அறிவித்தது முதலே இந்த செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.