செம்ம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.! வித்தியாசமான முறையில் மைனாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6 103 நாட்களை கடந்து நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், மொத்தம் 16 போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். கடைசியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருந்தும் நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக இன்று மற்றொரு போட்டியாளரை வெளியேற்றி அனுப்பி இருக்கிறது பிக்பாஸ். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இதுவரை மொத்தம் 16 போட்டியாளர்கள் வெளியேறியிருந்தனர். கடைசியாக அமுதவாணன், கதிரவன், சிவின், மைனா, அசீம், விக்ரமன் என ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட பணம் மூட்டை டாஸ்க்கில் வைக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கதிரவன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இது சுவாரஸ்யமின்மையை குறைத்த காரணத்தினால் மீண்டும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.! வித்தியாசமான முறையில் மைனாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி.! 1
நேற்று மீண்டும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டாவது முறை பணப்பெட்டி வைத்தது இந்த சீசனில் தான். இதில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை 2500 ரூபாய் ஏறிக்கொண்டே இருந்தது. இறுதியில் 11,75,000 வந்தவுடன் அதை அமுதவாணன் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து தற்போது வெளியேறி இருந்தார். இதனால் வீட்டில் பைனலிஸ்டாக இருந்தவர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்தது. அசீம், விக்ரமன், ஷிவின், மைனா என நான்கு பேர் மட்டுமே போட்டியில் நீடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக அடுத்த போட்டியாளர் ஒருவரை எவிக்ட் செய்து வெளியே அனுப்பி இருக்கின்றனர். அது மைனாவாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஹைட்ராலிக் மெஷின் ஒன்றில் ஏறி நிற்குமாறு பிக்பாஸ் கூறுகிறார். அந்த மெஷின் மேலும் கீழும் ஏறி ஏறி இறங்கி கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கீழே இறங்கும் அந்த மிஷின் மீண்டும் ஆள் இல்லாமல் மேலே ஏறி வருகிறது.

இதனால் கடைசி எலிமினேஷனாக மைனா வெளியேறி இருப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. மிகவும் பரபரப்புடன் அந்த ப்ரோமாவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஆளுடன் சென்று காலியாக வரும் அந்த மிஷினை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்