மைனா தற்போது தன் மகன் துருவுக்காக மீன் குழம்பு வைத்து அசத்தியுள்ளார். அனால் அதை பார்த்த துருவ் மைனாவை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார். செம்ம காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை மைனாவே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரையில் பிறந்து வளர்ந்தவர் மைனா நந்தினி. இவர் ஆரம்பத்தில் சமையல் மந்திரம் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் நந்தினி. இதன் பிறகு நந்தினி என்கிற பெயரே மறந்து மைனா என்று சொன்னால் தான் அவரை தெரியும் அளவிற்கு மிக பிரபலமாக மாறி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடகத்திற்கு பிறகு சரவணன் மீனாட்சி பாகம் 3, நீலி, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார். சில வெப் சீரிஸ்களில் கூட நடித்திருக்கிறார் மைனா. பின்னர் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெண்ணிலா கபடி குழு, காஞ்சனா 3, நம்ம வீட்டு பிள்ளை, விக்ரம், விருமன் போன்ற பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார் மைனா. இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 6லும் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசி நான்கு இடங்களில் ஒருவராக வந்த அவர் நான்காவது ஆளாக வெளியேற்றப்பட்டு இருந்தார். மைனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவரது முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட இரண்டாவதாக யோகி என்ற சின்னத்திரை நடிகரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு துருவ் என்கிற மகன் இருக்கிறார். துருவ் பெயருக்கு ஏற்றார் போல துரு துருவென இருக்கும் ஒரு குழந்தை. இவர் செய்யும் சேட்டைகளையும் குறும்புகளையும் அடிக்கடி வீடியோக்களாக எடுத்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மைனா. இந்த நிலையில் தற்போது மைனா தனது youtube பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் தனது மகனுக்காக மீன் குழம்பு சமைத்து கொடுத்து அசத்தியுள்ளார். அதை பார்த்த துருவ் அம்மா குழம்புல பல்லி கிடக்கு என சொல்ல சொல்லி மரணமாக கலாய்த்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Myna Wings