Categories: Bigg Boss Tamil 6

மைனாவும் Adk-வும் சொந்த காரங்களா? ரெண்டு பேருக்கும் என்ன உறவுன்னு தெரியுமா? லீக்கான தகவல்

வெளியிட்டது

பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கும் மைனாவும் ஏடிகேவும் உறவினர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் தான் மைனா எந்த தவறு செய்தாலும் ஏடிகே அதற்கு சப்போர்ட் செய்கிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியும் வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் பல தடைகளைத் தாண்டி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தால் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது மைனாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியாகிய 500 கோடி வசூலை குவித்த விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 3 மனைவிகளில் ஒருவராக மைனா நடித்திருந்தார்.

மைனாவும் Adk-வும் சொந்த காரங்களா? ரெண்டு பேருக்கும் என்ன உறவுன்னு தெரியுமா? லீக்கான தகவல் 1

மேலும் விருமன் படத்திலும் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார் மைனா. இந்த நிலையில் மைனாவுக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 20 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டது. மைனா ஒரு வாரத்திற்கு பிறகு தான் உள்ளே சென்றார். வெளியே பார்த்த மைனாவிற்கும், பிக்பாஸ் உள்ளே இருக்கும் மைனாவிற்கும், பல வித்தியாசம் இருக்கிறது. மைனா மற்ற போட்டியாளர்களிடம் சற்று கடுமையான முறையில் நடந்து கொள்கிறார். மகேஸ்வரி உடன் சேர்ந்து கொண்டு அவர் இவ்வாறு செய்கிறார் என்று மைனா மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது. மேலும் ஒரு குரூப்பை உருவாக்கி அதற்கு தலைவி போல் மைனா செயல்படுகிறார் என்றும் மைனா மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அந்தக் குழுவில் முக்கிய நபராக இருப்பவர் ஏடிகே. ஏடிகே இலங்கை சேர்ந்த ராப் பாடகர் என்பது மட்டும்தான் நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் உண்மையில் அவர் மைனாவின் சொந்த மாமன் மகன் ஆவார். பிக்பாஸில் முன்பு ஒரு முறை தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகிய இருவரை மட்டுமே உறவினர்களாக எடுத்திருந்தனர். அது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. எனவே அதன் பின்னர் எந்த உறவினர்களையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் மைனாவும் அவரது மாமன் மகன் ஏடிகேவும் எடுக்கப்பட்டுள்ள விஷயம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனால் தான் ஏடிகே மைனாவிற்கு ஓவராக ஜால்ரா அடிக்கிறாரா என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்தும் வருகின்றனர்.

சிறு வயதிலேயே ஏடிகேவின் தந்தை இலங்கைக்கு சென்று விட்டதால், ஏடிகேவிடம் தான் அவ்வளவாக பேசியதில்லை. ஆனால் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ எதும் போட்டால் தனியாக சென்று மெசேஜ் செய்வேன், அவருக்கு திருமணம் ஆன பிறகு, அவரிடம் பேசுவதை குறைத்துவிட்டேன் என்று பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்