பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா குறித்து உருவக் கேலி செய்த யூடியூபர் பற்றி மைனாவின் கணவர் யோகேஷ் ஒரு பேட்டியில் காட்டமாக பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து அந்த யூடியூபர் தற்போது குடும்பத்துடன் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி 66 நாட்களைக் கடந்து கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் மைனா. சரவணன் மீனாட்சி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் ஒரு முக்கிய போட்டியாளராக வலம் வருகிறார் மைனா. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்க்கில் மைனா பங்கெடுத்து வெற்றியும் பெற்று இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமுதவாணன், ரட்சிதா மைனா ஆகிய மூவரும் அந்த போட்டியில் கலந்து கொண்டனர். கேப்டன்சி டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரை இடுப்பிலும் டயப்பர் கட்டப்பட்டிருந்தது. அதன் மூலமாக நீரை சேமித்து எதிரில் வைக்கப்பட்டிருக்கும் குழாயில் நிரப்ப வேண்டும். யார் அதிகமாக நிரப்புகிறார்களோ அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரட்சிதா மைனா அமுதவாணன் ஆகிய மூவரும் விளையாடிய போது மைனா அதில் வெற்றி பெற்றார். அதனால் மைனா இந்த வாரமும் கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்றிருந்தார். மைனா மூன்றாவது முறையாக கேப்டனான அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. மணிகண்டன் மற்றும் மைனா இருவரும் மாறி மாறி கேப்டன் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் கடுப்பாகினர்.
மேலும் பிக்பாஸ் பற்றி விமர்சனம் செய்யும் யூடியூபர் ஒருவர் மைனாவை பார்த்து மைனாவின் அந்தரங்க உறுப்பை பார்த்து கேள்வி கிண்டலமாக பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த யோகி மிகக் கடுப்பாகி நான் நினைத்திருந்தால் அந்த சேனலுக்கு ஸ்ட்ரைக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதை செய்யவில்லை. இனிமேல் யாரும் அது போல் செய்யக்கூடாது என்று பேசி இருந்தார். மேலும் மைனா கேப்டன் ஆவதற்கு பிக்பாஸ் உதவுகிறார்கள் என்று பலரும் பேசுகிறார்கள், ஆனால் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட விஜய் டிவியை சேர்ந்தவர்கள் யாருமே பிரபலமாகவில்லை. கெட்ட பெயருடன் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள் இதை உதவி என்று எப்படி சொல்ல முடியும்? என்றும் பேசியிருந்தார். இதையடுத்து அந்த யூடியூபர் தனது குடும்பத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.! அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Indiaglitz