விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியலில் “மைனா” என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகம் ஆனவர் நந்தினி. பின்னர் இவர் பெயர் மைனா என்றே ஆகி போனது. அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற விஜய் டிவி சீரியல்களில் நடித்தார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் வந்தார். ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் நடித்துள்ளார். இவர் 2019 இல் சின்னத்திரை நடிகர் யோகி என்கிற யோகேஷ்வரனை 2வது திருமணம் செய்துகொண்டார். யோகேஷ் ராஜா ராணி, சத்யா, நாயகி சீரியல்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு துருவ் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் வார இறுதியில் ஒளிபரப்பான மிஸ்டர் & மிஸ்ஸர்ஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பிடித்த ஜோடியாக மாறி போயினர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் செய்யும் குறும்பு, ரொமான்ஸ், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு ஆகியவற்றால் மக்களை மகிழ்வித்து கொண்டிருந்தனர். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை கால்பதித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் மைனா! அரண்மனை 3 படத்தில் கூட மறைந்த விவேக் அவர்களுக்கு ஜோடியாக சேர்ந்து நகைச்சுவை செய்திருப்பார்! சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கூட விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருப்பார் மைனா.
தற்போது விக்ரம் படத்தில் நடித்தபோது விஜய் சேதுபதியுடன் எடுத்த போட்டோ மற்றும் வீடியோக்களை vlogs ஆக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பற்றி எந்த பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் தொடங்கி இன்று வெள்ளித்திரை வரை சென்று ஜொலித்து கொண்டிருக்கும் மைனாவை அவரது ரசிகர்கள் வாழ்த்தி கொண்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை காண..Watch the below video..
Video Code Embed Credits: Myna Wings