மைனா ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன வைரல் வீடியோ.!

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் வாங்கும் சம்பளம் குறித்து மைனா பேசி இருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவருடைய சம்பளப் பணத்தை கேட்டால் தலையே சுற்றும் அளவிற்கு இருக்கிறது. பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வந்தவர் மைனா நந்தினி. விஜய் டிவியின் பிரபல சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நந்தினி. இவர் முதன்முறையாக பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகம் ஆகினார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டுப்பிள்ளை, விக்ரம், விருமன் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது என்னமோ சரவணன் மீனாட்சி சீரியல் தான்.

மைனா ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? அவரே சொன்ன வைரல் வீடியோ.! 1

அந்த சீரியலுக்குப் பிறகு வெறும் நந்தினியாக இருந்த இவர் மைனா நந்தினி ஆக தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு துருவ் என்கிற மகனும் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மைனா அப்போது வீடியோக்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விளாக் வீடியோக்களை தனது youtube பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் மைனாவின் சம்பள விவரம் குறித்து தற்போது வீடியோ வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் தற்போது 24 மணி நேரமும் பார்க்கும் வகையில் ஒளிபரப்பாகி வருவதால் போட்டியாளர்கள் பேசும் பல விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.


தனலட்சுமி மைனா மணிகண்டன் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது மைனா, பிக்பாஸ் ரெஸ்ட் எடுத்ததை விடாமல் டாஸ்க் கொடுத்து வருகிறார் என்று கூறுகிறார். அதற்கு உடனே மணிகண்டன் அதற்குத்தான் உனக்கு 1.5 லட்சம் சம்பளம் தருகிறார்கள் என்று சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ந்து போன தனலட்சுமி, “நிஜமாவே உங்களுக்கு ஒரு நாளைக்கு அவ்வளவு சம்பளமா?” என்று கேட்க மைனாவும் ஆம் என்று தலையை ஆட்டுகிறார். பின்னர் மணிகண்டன் மொத்த தொகையை கணக்கு போட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது 90 லட்சம் என்று சொல்ல, தனலட்சுமி அதைக் கேட்டு வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் எடுத்து இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்