அயோ தங்கத்துக்கு திருஷ்டி பட்டிருக்கும்.! வீட்டிற்கு வந்த மைனாவுக்கு திருஷ்டி சுற்றிய அம்மா.!

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய மைனா நந்தினியை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்தும், கேக் வெட்டியும் கொண்டாடி இருக்கும் வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சின்னத்திரையை கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் தான் மைனா நந்தினி மற்றும் யோகி. மதுரையில் பிறந்து வளர்ந்த நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் “மைனா” என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் அதுவே அவரது அடையாளமாகிப் போனது. பின்னர் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார். அதற்கு பின்னர் இவர் அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பல தொடர்களில் நடித்தார். நம்ம வீட்டுப் பிள்ளை, விருமன், விக்ரம், சர்தார் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் இவருக்கு யோகி உடன் திருமணம் நடைபெற்று துருவ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. தற்போது மைனா பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோ தங்கத்துக்கு திருஷ்டி பட்டிருக்கும்.! வீட்டிற்கு வந்த மைனாவுக்கு திருஷ்டி சுற்றிய அம்மா.! 1

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் கழித்து வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அவர் 103 நாட்களைக் கடந்து வீட்டிற்குள்ளே இருந்தார். ஆரம்பத்தில் மைனா பலராலும் விமர்சிக்கப்பட்டார். அவர் தனது கருத்தை எந்த இடத்திலும் முழுமையாக முன்வைப்பதில்லை, தைரியமாக பேசுவதில்லை, மணிகண்டன் உடன் சேர்ந்து கொண்டு சேஃப் கேம் விளையாடுகிறார் என்று மைனா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து மைனா 103 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடி வந்தார். பின்னர் வித்தியாசமான முறையில் மைனா எலிமினேட் செய்யப்பட்டார். ஒரு ஏறி இறங்கும் மெஷின் ஒன்றில் ஏறி நின்று கொண்டு கீழே இறங்கிய அவர் பின்னர் வீட்டிற்குள் வரவே இல்லை. மிட் வீக் எலிமினேஷன் என்கிற பெயரில் மைனாவை வெளியே அனுப்பி இருந்தது பிக் பாஸ் டீம்.


வெளியே வந்த பின் முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லி மைனா முதல் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மைனாவை அவரது குடும்பத்தினர் ஆரத்தி எடுத்தும் கேக் வெட்டியும் வரவேற்று இருக்கின்றனர். அதில் அவர் தனக்கு இன்னும் பிக்பாஸ் சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். வந்த உடனேயே உங்கள் அனைவருக்கும் ட்ரீட் வைக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்