Categories: சினிமா

“என் ஆபீஸ் வந்ததும் உதவி இயக்குனர முதலில் குடிக்க சொல்லுவேன் – மிஷ்கின்”!!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவம் கொண்ட இயக்குனர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். commercial படங்களை தவிர்த்து மிகவும் மக்களுக்கு தன்னுடைய படங்களில் ஏதாவது தனித்துவமான விஷயங்களை மிக அழுத்தம் திருத்தமாக சொல்லி வருபவர் மிஷ்கின். படங்கள் வெற்றியடைய வில்லை என்றாலும், தொடர்ந்து தன்னுடைய படங்கள் மூலம் சினிமாவிற்கு அடுத்தடுத்து தன்னுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். Video given below.

"என் ஆபீஸ் வந்ததும் உதவி இயக்குனர முதலில் குடிக்க சொல்லுவேன் - மிஷ்கின்"!! 1

2006ஆம் சித்திரம் பேசுதடி படம். முற்றிலும் புது நடிகர்கள், அறிமுக இயக்குனர் என்ற போதிலும் ஆனால் படம் மிக பெரிய ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவை உற்று நோக்க வைத்தார் முதல் படத்திலேயே மிஷ்கின். முதல் படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குடியும், பிசாசு போன்ற சிறப்பான படங்களையே கொடுத்தார்.

படங்களில்ன் வெற்றி தோல்வி குறித்து பெரிதாக எடுத்துக்கொள்ளாத மிஷ்கின், எப்போதும் சிறந்த படங்களை பாராட்டுவதில், பேசுவதிலும் முதலில் நிற்கிறார். ஆனால் பல நேரங்களில் இவருடைய பேச்சுக்கள் வேறுவிதமாக சமூகவெளிகளில் பிரதிபலிக்கின்றன. நடுவில் துப்பறிவாளன் 2 படம் கொடுத்த சண்டை இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் பெரிய தவறாக போனது. ஆனாலும் அதில் தன்பக்கம் உள்ள உண்மையை அழகாக எடுத்து வைத்து விட்டார்.

தற்போது நடிகர் அதர்வா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இப்படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் நடிகர் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

“எனது உதவி இயக்குனர்கள் எனது ஆபிசுக்கு வந்தவுடன் முதலில் மது அருந்தத்தான் சொல்லி தருவேன். குடித்துவிட்டு மனதில் இருப்பதை உளறு உண்மையை சொல்லு என்னை அடி ஆனால் என்னிடம் உண்மையாக இரு. என்னுடைய உதவி இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்தால் என்னுடைய உதவி இயக்குனர்கள். அப்படி இல்லை என்றால் கிடையாது” என கூறி பேசினார். இந்த பேச்சு இப்பொது கொஞ்சம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Video Courtesy – Black Pepper News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்