இயக்குனர் மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கும் “டெவில்” படத்தில் இருந்து முதல் பாடலான “கலவி” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முதலிடம் பிடிப்பவர் மிஷ்கின். இவர் 2006ம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, யுத்தம் செய், நந்தலாலா, துப்பறிவாளன், சைக்கோ, முகமூடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். அனைத்து படங்களுக்கும் வெற்றி படங்களாக அமைந்தது. 2020ம் ஆண்டு எடுத்த சைக்கோ படத்திற்கு பின்னர் பெரிய அளவில் எந்த படங்களையும் இவர் இயக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் மிஷ்கின். தற்போது தளபதி விஜயின் லியோ படத்திலும், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கைவசம் பிசாசு 2 படத்தையும் இயக்கி வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர், நடிகர் போக இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் மிஷ்கின். இயக்குனர் ஆதித்யா இயக்கி வரும் டெவில் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் மிஷ்கின். இந்த படத்தில் நடிகர் விதார்த், பூர்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள கலவி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பாடல் மூலமாக மிஷ்கின் நல்ல இசையமைப்பாளர் என்பதை நிரூபித்துள்ளார். பாடலை கேட்ட ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு மெலடி கேட்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இயக்கத்தின் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட மிஷ்கின் இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sony Music South