Categories: சினிமா

சுந்தரி – பாரதி கண்ணம்மா நடிகைகள் நடித்துள்ள முதல் படம்.! N4 படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.!

வெளியிட்டது

சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கேப்ரியல்லாவும், பாரதிகண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் வினுஷா தேவியும் இணைந்து தற்போது N4 என்கிற படத்தில் நடித்திருக்கின்றனர். அந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிக் டாக் செயலியின் மூலம் அறிமுகமான இரண்டு நடிகைகள் தான் கேப்ரியல்லா மற்றும் வினுஷா தேவி இவர்களுக்கு சீரியல் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக டிக் டாக் செயலியில் டிக் டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இதில் சுந்தரி சீரியல் நடிகையாக இருக்கும் கேப்ரியல்லா குடும்ப உறவுகளைப் பற்றி கவிதை போல் எழுதி அதை படித்துக் காட்டி பிரபலமானவர். வினுஷா தேவி சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து அதன் மூலமாக பிரபலமானவர். இருவரும் தற்போது இணைந்து N4 என்கிற படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் நாளை திரையில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுந்தரி - பாரதி கண்ணம்மா நடிகைகள் நடித்துள்ள முதல் படம்.! N4 படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.! 1
ஸ்னீக் பீக் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, சென்னையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கியிருக்கிறார். படம் கொடுத்து அவர் பேசும் பொழுது, “இதுவரை சென்னையில் வாழும் அடித்தட்டு மக்களின் சொல்லப்படாத கருத்துக்களை இந்த படம் கூறி உள்ளதாக அவர் பேசியிருந்தார்”. இந்த படத்தில் ஹீரோவாக கனா காணும் காலங்களில் நடித்து பிரபலமான மைக்கேல் தங்கதுரை நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கேப்ரியல்லா நடித்திருக்கிறார். வினுஷா தேவி இந்த படத்தின் இரண்டாவது நாயகி காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அப்சல் ஹமீது நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் அனுபமா குமார், பிரக்யா, அக்ஷய் கமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நவீன் சர்மா என்பவர் தயாரித்திருக்கிறார்.


இந்த படம் உருவாகி சில நாட்கள் ஆன போதிலும் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் தற்போது படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சிகள் என்று சொல்லப்படும் இரண்டு நிமிட காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Credits: Moviebuff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்