திரைத்துறையில் பலரும் வருவார்கள் போவார்கள். ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள். அதுவும் நடிகர், நடிகைகளை தாண்டி சிலர் மட்டுமே நீங்காத இடம் பிடிப்பார்கள். அது அரிதினும் அறிய நிகழ்வுகள் ஆகும். கலைத்துறையில் எழுத்து என்பது மிகவும் முக்கிய ஒன்று. இசை போலவே அழியாதது எழுத்துக்கள். அந்த எழுத்தால் தான் வாழ்ந்த சில காலங்களிலேயே வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தேவையான காலை பணியை ஆற்றி மறைந்தவர் எழுத்தாளர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார்.

வசனகர்த்தாவாக பாலு மஹேந்திராவிடம் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய இவர், அழியாத பாடல்கள் பலவற்றை நமக்காக கொடுத்துள்ளார். வாரணம் ஆயிரம், கிரீடம் போன்ற படங்கள் வசங்களை இவர் இயற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் பாடல்கள் இயற்றி வரும் இவர், இது வரையில், தமிழ் சினிமாவில் 150ற்கும் மேற்பட்ட படங்களில் 250 மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியுள்ளார்.
பல்வேறு வகையிலான பாடல்கள் இயற்றியுள்ள இவர் இரண்டு முறை சிறந்த பாடலாசிரியர் விருதினை “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” மற்றும் “அழகு” என்ற பாடல்கள் முறையே “தங்க மீன்கள் மற்றும் சைவம்” படங்களுக்கு தேசிய விருதினை வென்றுள்ளார். 4 பிலிம் பேர் மற்றும் 4 தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதையும் இவர் வென்றுள்ளார்.
இயக்குனர்கள் செல்வராகவன், ராம், அமீர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றோர் படங்களில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா. முத்துக்குமாரின் இணை பல வெற்றி பாடல்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. என்றும் மக்கள் மனதில் அழியாத இடத்தை இவர் தன்னுடைய எழுத்தால் உருவாக்கிவைத்துள்ள முத்துக்குமார், எழுத்தாளராகவும் 7 புத்தகங்கள் இயக்கியுள்ளார். கலைத்துறையில் அழியாத இடத்தை உருவாக்கி சென்றுள்ள இவர் அடுத்து வரும் தலைமுறைகளும் ரசிக்கும் எழுத்தாளராக எழுந்துள்ள வரை அழியாமல் இருப்பார்.