சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வந்த நடிகை தீபாவிற்கு தற்போது சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. பலரும் தீபாவிற்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை.! 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வில்லனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தீபா. தனது மகன் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்காமல் மகனுக்கு சப்போர்ட் செய்யும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி காட்வின் என்ற மகன் இருக்கும் நிலையில் அவருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அன்பே சிவம் என்கிற சீரியலின் மூலமாக பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை தீபா. ஆரம்பத்தில் துணை வேடங்களில் நடித்து வந்த அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த பூவே, சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமான தோழி போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு தொடர் என்று சொன்னால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தான்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளாக இவரது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் தனது முதல் கணவரை பிரிந்த அவர், தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர் இரண்டாவதாக யாரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் அது குறித்து அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருடைய திருமண சர்ச்சைகள் இணையத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் உலவி வந்த நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அமைதி காத்து வந்த தீபா, தற்போது திருமண புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். விரைவில் திருமணம் குறித்து விளக்கத்தை அவர் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்