நானே வருவேன் படத்தில் இருந்து தற்போது பிஞ்சு பிஞ்சு மழை என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் நானே வருவேன். இந்த திரைப்படம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதி மணிரத்தினம் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாகவே நானே வருவேன் திரைப்படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருந்தது. பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டி போடுவதால் நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கி இருக்கிறது. நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று வரும் நிலையில், நானே வருவேன் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவனுடம் இணைந்து நானே வருவேன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். இதற்கு பின்னர் இவர் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோக்களில் சைக்கோ கொலையாளி போல ஒரு தனுஷும், சாந்தமாக ஒரு தனுஷும் காணப்படுகின்றனர். மேலும் படத்தில் இருந்து வெளியாகும் ப்ரோமோக்களும் பீதியை கிளப்பி வருகிறது. காட்டுப் பகுதியில் நடக்கும் சண்டை காட்சிகள் திகிலை ஏற்படுத்துகின்றன.
படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திலிருந்து சில காட்சிகளை ப்ரோமோக்களாக வெளியிட்டு படக்குழு ப.ரமோஷன் செய்து வருகிறது. படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது பாடலாக “பிஞ்சு பிஞ்சு மழை” என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Saregama Tamil