தனது மகளின் முகத்தை முதல் முறையாக காட்டி வீடியோ வெளியிட்ட நடிகை நக்ஷத்திரா.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியல் பிரபலம் நட்சத்திரா தற்போது தனது மகளின் முகத்தை முதல்முறையாக காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தனது மகளின் முகத்தை முதல் முறையாக காட்டி வீடியோ வெளியிட்ட நடிகை நக்ஷத்திரா.! வீடியோ உள்ளே.! 1
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் தமிழில் ‘கிடா பூசாரி மகுடி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். வெள்ளித் திரையில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால், சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார்.


முதன்முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்கிற நாடகத்தில் ‘வெண்ணிலா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். கிராமத்து நடிகையாக, யதார்த்தமான நடிப்பும், முகபாவனைகளும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இந்த சீரியலுக்குப் பின்னர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்குச் சென்ற அவர், ‘வள்ளி திருமணம்’ என்கிற தொடரில் நடித்து வந்தார். கலர்ஸ் தொலைக்காட்சி திடீரென அனைத்து சீரியல்களையும் முடித்து இருந்ததால், வள்ளி திருமணம் சீரியலும் முடிவுக்கு வந்திருந்தது.


பின்னர் ஒரு நாள் தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார் நட்சத்திரா. தொலைக்காட்சியில் தன்னுடன் பணியாற்றிய விஷ்வா என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அவருடன் திருமணம் முடிந்ததாகவும் அறிவித்திருந்தார்.


தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், தனது திருமணத்தை பார்க்க அவர் விரும்பியதாரலும், குடும்ப கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாக விளக்கம் அளித்திருந்தார் நட்சத்திரா. இவரது திருமணத்தில் இவரது நெருங்கிய தோழிகள் கூட கலந்து கொள்ள முடியவில்லை.


இந்த நிலையில் நட்சத்திரா விற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆன நிலையில், இது நாள் வரை குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்து வந்தார்.


இந்த நிலையில் வீடியோ ஒன்றில் தனது குழந்தையின் முகத்தை முதன்முறையாக காட்டி அழகிய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். “தனது குடும்பத்தில் கண்திருஷ்டி போன்ற நம்பிக்கைகள் இருப்பதால் முதல் மூன்று மாதங்கள் காட்ட வேண்டாம் என்று இருந்தேன். பின்னர் அது ஆறு மாதம் ஆகிவிட்டது. தற்போது புத்தாண்டுக்கு எனது மகளை அறிமுகப்படுத்துகிறேன்” என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.


பார்ப்பதற்கு அப்படியே நட்சத்திராவை உரித்து வைத்திருக்கிறார் அவரது மகள். மகளுக்கு ‘இதழ்’ என்று பெயரிட்டு இருப்பதாகவும், அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்களும் குவிந்து வருகிறது.

Youtube Video Embed Code Credits: Nakshatra’s Diary

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்