பெயர் சூட்டு விழா நடத்தி மகனுக்கு அழகிய தமிழ் பெயர் வைத்த நக்ஷத்திரா.! புகைப்படங்கள் இதோ

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்ற தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. தற்போது இவர் தனது மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பெயர் சூட்டு விழா நடத்தி மகனுக்கு அழகிய தமிழ் பெயர் வைத்த நக்ஷத்திரா.! புகைப்படங்கள் இதோ 1
‘கிடா மகுடி பூசாரி’ என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நட்சத்திரா. கேரளாவைச் சேர்ந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஆனால் திரைப்படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காத காரணத்தினால் தனது கவனத்தை சின்னத்திரை பக்கம் திருப்பினார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ என்கிற சீரியலில் யதார்த்தமான கிராமத்து பெண்ணாக வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் நட்சத்திரா.

பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ என்கிற சீரியலில் நடித்து வந்தார். கலர்ஸ் தொலைக்காட்சியில் அனைத்து சீரியல்களையும் முடித்து விட்டதால் அந்த சீரியலில் இருந்து விடை பெற்றார்.

இதற்கிடையில் நட்சத்திராவிற்கும் அவருடன் பணியாற்றிய விஸ்வநாத் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நட்சத்திரா தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அந்தக் குழந்தைக்கு “இதழ்” என்று அழகான தமிழ் பெயர் சூட்டியிருக்கிறார்.

இந்த பெயர் சூட்டு விழாவிற்கு நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் வரவழைத்து விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.


அந்த அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்