நக்ஷத்ராவுடன் மீண்டும் இணைந்த ஸ்ரீநிதி.! கர்ப்பமாக இருக்கும் தோழியை மீண்டும் சந்தித்த ஸ்ரீநிதி.!

வெளியிட்டது

நடிகை ஸ்ரீ நிதியும் நட்சத்திராவும் தற்போது இணைந்து ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. பழைய மன கசப்புகளை மறந்து தற்போது தோழிகள் இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். கிடா பூசாரி மகுடி என்கிற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நட்சத்திரா. வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் தலைகாட்டத தொடங்கினார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இதே நாடகத்தில் நடித்த சைத்ரா மற்றும் நட்சத்திரா இருவரும் தோழிகளாயினர். அதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி போன்றவர்களும் இவர்கள் நட்பு வட்டத்தில் இணைந்தனர். அனைவரும் இணைந்து அவுட்டிங் செல்வது, வெளியில் செல்வது, படங்களுக்கு செல்வது, ரீல்ஸ் செய்வது என்று பிசியாக இருந்து வந்தனர். அவ்வப்போது ஒன்றாக இணைந்து டிக்டாக் செய்து அந்த வீடியோக்களையும் இணையத்தில் பதிவேற்றி வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நக்ஷத்ராவுடன் மீண்டும் இணைந்த ஸ்ரீநிதி.! கர்ப்பமாக இருக்கும் தோழியை மீண்டும் சந்தித்த ஸ்ரீநிதி.! 1
இதில் ஸ்ரீநிதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7c என்கிற நாடகத்தின் மூலமாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இவர் ஜீ தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீநிதி தனது தோழிகள் குறித்து தவறாக பேசத் தொடங்கினார். நட்சத்திரா காதலித்து வந்த நபர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் மிகுந்த சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது. நட்சத்திராவை அடைத்து வைத்து அவரை கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். நடிகை வி.ஜே சித்ரா போல நட்சத்திரா நிலைமையும் ஆகிவிடும் என்றெல்லாம் சில கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் ஸ்ரீநிதி. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் இது போல் நடந்து கொள்கிறார் என்று அவரது தாய் உட்பட அனைவரும் பேட்டி அளித்து வந்தனர். இதை நண்பர்களாகிய நட்சத்திர கயல் போன்றவர்களும் புரிந்துகொண்டு ஸ்ரீ நிதியை தொந்தரவு செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீநிதி சரியான மருத்துவம் எடுத்துக்கொண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறார். மன அழுத்தம் குறைந்து தற்போது அவர் நன்றாக இருக்கிறார்.


இதனால் ஸ்ரீநிதி மீண்டும் தற்போது தனது தோழிகளுடன் இணைந்து இருக்கிறார். எந்த தோழியை பற்றி தவறாக பேசினாரோ, அந்த தோழி நட்சத்திரா தற்போதைய கர்ப்பமாக இருக்கிறார். அவருடன் மீண்டும் இணைந்து நடனமாடி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் தோழிகள் மீண்டும் இருவரும் இணைந்துவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது் இனி உங்களுக்குள் எந்த விதமான பிரிவும் இல்லாமல் சந்தோஷமாக இருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஸ்ரீநிதியும் நட்சத்திராவும் மீண்டும் இணைந்ததில் பலருக்கும் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்