ஹீரோயினை மாற்றி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் முடிவுக்கு கொண்டு வந்த ஜீ தமிழ் சீரியல்.!

வெளியிட்டது

ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் ஹீரோயினை மாற்றி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது சீரியல் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோயினை மாற்றி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் முடிவுக்கு கொண்டு வந்த ஜீ தமிழ் சீரியல்.! 1

கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு தொடர் தான் ‘நளதமயந்தி’.

இந்த சீரியலில் தமயந்தியாக பிரியங்கா நல்காரரியும், நளனாக நடிகர் நந்தாவும் நடித்து வந்தனர்.

 

உணவகம் ஒன்றை நடத்தி வரும் தமயந்திக்கும் தொழிலதிபரான நளனுக்கும் ஏற்படும் காதல் பற்றி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமயந்தி இறந்து விட்டது போல காட்டப்பட்டது.

அவரது தங்கையாக நடிகை ஸ்ரீநிதி, அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்த பிரியங்கா நல்காரி, “தான் சீரியலில் இருந்து விலகவில்லை. யாரோ தவறான தகவல்களை பரப்பி இருக்கிறார்கள். விரைவில் இரண்டாவது அட்டவணைக்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.

சீரியலில் ஏதோ குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது திடீரென சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.

கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சீரியல் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

180 எபிசோடுகளை மட்டுமே கடந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்