நமீதா தனது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் விழாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு “எங்கள் அண்ணா” என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை நமீதா.

இவர் அஜீத், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் மகா நடிகன், ஏய், இங்கிலீஷ் காரன், ஆணை, பச்சை குதிரை, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். பின்னர் இவருக்கு கிடைத்த புகழை கொண்டு இவர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஆனால் இவரால் பிக்பாஸ் போட்டியில் தொடர முடியவில்லை. போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறினார். பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார். வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் தற்போது அவர் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
கடந்த ஆண்டு இவருக்கும் தயாரிப்பாளர் வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும் திருமணம் நடை பெற்றது. அவர்களுக்கு இந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. அந்தப் புகைப்படங்களை நமீதா எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து இருந்தது.
இன்று நமீதாவின் சொந்த ஊரான சூரத்தில் தனது இரு மகன்களுக்கும் பெயர் வைத்து இருக்கிறார். பெயர் வைக்கும் விழாவின் புகைப்படங்களை பகிர்ந்த அவர் “கிருஷ்ண ஆதித்யா”, “கியான் ராஜ்” என்று தனது மகன்களுக்கு பெயர் வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள நமீதா இறைவன் கிருஷ்ணனின் அருளால் எனக்கு பரிசளிக்கப்பட்ட இந்த இரண்டு சிறிய அற்புதங்கள் தான் எனது குழந்தைகள். இவர்கள் விலைமதிப்பற்ற பரிசு கிருஷ்ணனின் பெயரை இந்த குழந்தைகளுக்கு வைப்பேன் என்று நான் அவரிடத்தில் உறுதியளித்தேன். கிருஷ்ணருக்கு என்னுடைய நன்றியும் பாராட்டுதலையும் கூறுகிறேன். இவர்கள் தான் என்னுடைய உலகம் என்று பதிவிட்டு இருக்கிறார்.