Categories: சினிமா

ஒரு வயதை நிறைவு செய்த நமீதாவின் இரட்டை குழந்தைகள்.! கேரளாவில் சாமி தரிசனம் செய்த நமீதா.!

வெளியிட்டது

தனது இரண்டு மகன்களில் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது நமீதா குழந்தைகளுடன் கேரளாவில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா என்கிற படத்தில் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நமீதா.

ஒரு வயதை நிறைவு செய்த நமீதாவின் இரட்டை குழந்தைகள்.! கேரளாவில் சாமி தரிசனம் செய்த நமீதா.! 1
பின்னர் சத்யராஜ், சரத்குமார், அஜீத், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவர் நடித்த மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், ஆனை, பச்ச குதிரை, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா போன்ற பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருந்தது. அதன் பின்னர் இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த போது இவர் 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே மக்களின் செல்வாக்கை இழந்த இவர் இந்த போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.


தமிழ் மொழி புரியாத காரணத்தினாலும் அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போட்டதாலும் மக்கள் அவரை பாதியிலேயே வெளியேற்றினர். பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற அவர், பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கும் தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நமீதா. அதன்பின்னர் 5 ஆண்டுகள் இருவருக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்திருந்தார். பின்னர் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக கூறி அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார் நமீதா.


சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமீதா தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வபோது பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் அருளால் தனக்கு இரு மகன்கள் பிறந்திருப்பதால் இருவருக்கும் கிருஷ்ண ஆதித்யா, கியான் ராஜ் என்று கிருஷ்ணரின் பெயர்களையே சூட்டி உள்ளதாக தெரிவித்து இருந்தார்.


இந்த நிலையில் தற்போது நமீதா தனது இரு மகன்களுக்கும் ஒரு வயது நிறைவடைந்ததை அடுத்து இருவரையும் தூக்கிக்கொண்டு கேரளாவில் உள்ள கோவில் ஒன்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

புகைப்படங்களை பகிர்ந்து எங்களுடைய வாழ்க்கை ஒளியாகவும் பிரகாசமாகவும் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம், என்னுடைய கிருஷ்ண ஆதித்யாவிற்கும் கியான் ராஜுக்கும் தற்போது முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. நீங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை சேர்த்து இருக்கிறீர்கள், என்னுடைய இதயத்துடிப்பான இரட்டையர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐ லவ் யூ கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று பகிர்ந்திருக்கிறார்.

பலரும் நமீதாவின் இரட்டை குழந்தைகளின் முதல் நாள் பிறந்தநாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்