Categories: சினிமா

சோழர், பாண்டியர்களைத் தொடர்ந்து பல்லவர் வரலாறை தோண்டி எடுக்கும் நந்திவர்மன்.! ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

சமீப காலமாக மன்னர்களின் வரலாறையும், அவர்கள் குறித்த கதைகளையும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. அதுபோல சோழ மன்னர்களின் வரலாற்றை கற்பனை கதையோடு எழுதி இருந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக இயக்கி பிரம்மாண்ட சாதனை படைத்திருந்தார். அதை தொடர்ந்து பாண்டிய மன்னர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் இடையே நடக்கும் போரின் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தி ‘யாத்திசை’ என்கிற படம் ஒன்றை எடுத்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சோழர், பாண்டியர்களைத் தொடர்ந்து பல்லவர் வரலாறை தோண்டி எடுக்கும் நந்திவர்மன்.! ட்ரைலர் இதோ.! 1
அதைத் தொடர்ந்து தற்போது பல்லவ மன்னனான ‘நந்திவர்மன்’ குறித்தும் திருவண்ணாமலை பகுதியில் செஞ்சியில் அவர்கள் நடத்திய ஆட்சிப் பகுதிகளில் நடந்த கதை ஒன்றை மையமாக வைத்து ‘நந்திவர்மன்’ என்கிற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏகே ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஜிவி பெருமாள் வரதன் என்பவர் இயக்கியிருக்கும் படம்தான் ‘நந்திவர்மன்’. இந்த படத்தில் நடிகர் சுரேஷ் ரவி, சின்னத்திரை நடிகை ஆஷா கௌடா, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்துவின் மகன் மதன் கார்த்திக் எழுதியிருக்கிறார்.


திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி பகுதியில் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் நந்திவர்மன் கட்டிய கோவில் ஒன்றில் ஆய்வுக்காக தொல்லியல் துறையினர் வருகின்றனர். அப்போது அவர்களுக்கு சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. புதையுண்ட கோவிலை தொட்டதால் கிராமத்தில் அமானுஷ்ய நிகழ்வுகளால் மக்களிடையே பிரச்சனைகள் வெடிக்கிறது. மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் கோயில் மீட்க நினைக்கும் அரசு, கோவிலை தொட்டதால் கிராமத்தில் நடக்கும் மர்ம நிகழ்வுகள் என்று திகிலூட்டும் கதையம்சத்துடன் இந்த ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்