Categories: சினிமா

என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்..! நாஞ்சில் விஜயன் மனைவி பகீர் தகவல் ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமாகியவர் நாஞ்சில் விஜயன். பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து வருகிறார் . இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். நாஞ்சில் விஜயனின் பலமே அவரது லேடி கெட்டப் என்று சொல்லலாம் . பல நிகழ்ச்சிகளில் பெண் போல வேடமணிந்து வந்து மக்களை சிரிக்க வைத்து உள்ளார் .

என்னை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டார்..! நாஞ்சில் விஜயன் மனைவி பகீர் தகவல் ..! 1

நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் ஆகி இருந்தது. இந்த திருமணத்தை ரோபோ சங்கர் குடும்பம் முன் நின்று நடத்தி இருந்தது. தற்போது இவர் தனது மனைவி மரியா உடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார் . தற்போது இவர் தனது மனைவியுடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார் .

அதில் பேசியஅவரின் மனைவி மரியா , நாஞ்சில் தன்னை ஏமாற்றித்தான் திருமணம் செய்துகொண்டார் எனவும் , அவரின் வயதை சொல்லவே இல்லை என கூறி உள்ளார் . மேலும் இவருக்கு அங்கிள் வயது இருக்கும் எனவும் , தன்னை பெண் பார்க்க வந்தபோது கூட தலை மீசையெல்லாம் நரைத்து இருந்ததாக நகைச்சுவையாக பேசி கணவரை கலாய்த்து உள்ளார் .

வெளியிட்டது

புதிய செய்திகள்