நிறை மாத நிலவே வா வா.! செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு நடந்த வளைகாப்பு .! அழகிய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி சேகருக்கு வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

நிறை மாத நிலவே வா வா.! செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு நடந்த வளைகாப்பு .! அழகிய புகைப்படங்கள்.! 1

சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் வைத்திருக்கிறார்கள் தற்போதைய பெண் செய்தி வாசிப்பாளர்கள். குறிப்பாக அனிதா சம்பத், கண்மணி போன்றவர்கள் அணிந்து வரும் உடைகளுக்காகவும், மேட்ச் அண்ட் மேட்ச் ஆபரணங்களுக்காகவே பலரும் செய்திகளை பார்க்க தொடங்கியிருந்தனர்.

குறுகிய காலத்திலேயே அனிதா சம்பத் மற்றும் கண்மணி போன்றவர்கள் மிகப் பிரபலமானவர்கள். பிரியா பவானி சங்கர், சரண்யா துராடி போன்றவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகள் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இதில் கண்மணி சில ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சின்னத்திரை நடிகர் நவீனை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சின்னத்திரையின் க்யூட் ஜோடிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.


கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்னும் சீரியலில் சிவா என்னும் கதாபாத்திரத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி இருந்தார் நடிகர் நவீன். தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ட நாள் முதல் என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடிகள் ஏதாவது ஒரு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படி ஒரு வீடியோவை வெளியிட்ட போது கண்மணியின் வயிறு பெரிதாக இருந்ததை ரசிகர்கள் பார்த்து விட்டு கண்மணி கர்ப்பமாக இருக்கிறாரா? என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

இதனால் ஒரு வீடியோவை வெளியிட்டு கண்மணி கர்ப்பமாக இருக்கும் செய்தியை நவீன் மற்றும் கண்மணி இருவருமே உறுதி செய்திருந்தனர். சொல்லாமல் மறைக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை, சர்ப்ரைஸாக அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருந்தோம்.

ஆனால் வீடியோவில் வயிறு பெரிதாக இருப்பதை கவனிக்காமல் மாட்டிக் கொண்டோம் என்று கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார் கண்மணி.


இந்த நிலையில் தற்போது கண்மணிக்கு நேற்றைய தினம் வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்களை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் கணவர் நவீன் குறித்து “உன் சிறு அணைப்பில் ஓராயிரம் ஆறுதல் உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார் கண்மணி.

நவீன் மற்றும் கண்மணி தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விரைவில் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து வாருங்கள் என்று அவர்கள் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். Watch the Below Video..! 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்