தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை தற்போது அறிவித்து இருக்கிறார் நடிகர் நவீன். சர்ப்ரைஸாக சொல்ல நினைத்ததாகவும் ஆனால் வீடியோவை பார்த்து ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டதாகவும் நவீன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் நவீன். இவர் இதற்கு முன் டிக்டாக்கில் வீடியோக்கள் செய்து வந்தார். பின்னர் சின்னத்திரையில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயள பல ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கும் இவருடன் நடிக்கும் பிந்து என்பவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் நவீன் பிந்து இருவரும் நாங்கள் நண்பர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் நவீனுக்கும் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணிக்கும் திருமணம் முடிவானது. நவீன் மற்றும் கண்மணி குடும்ப நண்பர்கள். இருவரும் மீடியா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனேவ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 9 வரவேற்பும், ஜூன் 10 திருமணமும் நடைபெறும் என்று நவீன் அறிவித்து இருந்தார். அதன்படி இருவருக்கும் சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பல சின்னத்திரை நடிகர்கள் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில் கண்மணி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. ஒரு வீடியோவில் கண்மணி வயிறு பெரிதாக இருப்பதாய் கண்ட ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இதனால் இதற்கு விளக்கம் கொடுத்து தற்போது நவீன் கண்மணி தம்பதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் இந்த விஷயத்தை நாங்கள் சர்ப்ரைஸ் ஆக வைக்க நினைத்து இருந்தோம். ஆனால் எப்படியோ இந்த விஷயம் தெரிந்து விட்டது. மண்டை மேல் இருக்க கொண்டையை மறந்துவிட்டது போல ஆகிவிட்டது. வீடியோவில் வயிறு பெரிதாக இருந்ததை கவனிக்கவில்லை. கடவுள் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தாங்கள் பெற்றோர் ஆக போகும் அந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார்கள் . அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Navin Kanmani