விஜய் தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியலில் இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வந்த நந்தகோபால் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. புது ராமை அறிமுகப்படுத்தி கண்ணே கலைமானே சீரியல் குழுவினர் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது கண்ணே கலைமானே சீரியல். இதில் ராம் என்கிற கதாபாத்திரத்தில் நந்தகோபாலும். பானு என்கிற கதாபாத்திரத்தில் பவித்ராவும் நடித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமும் பானுவும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு விபத்தில் பானு கண் பார்வையை பறி கொடுக்க, ராமும் பழைய நினைவுகளை மறந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் பானு தான் தன் மனைவி என்பதை தெரிந்து கொள்ளும் ராம் தனக்கு பழைய நினைவுகள் மறந்து விட்டது என்பதை நம்ப வைக்க படாத பாடுபடுகிறார். ஒரு வழியாக தனக்கு நினைவுகள் மறந்ததால்தான் பானுவை கைவிட்டதை நிரூபித்து தற்போது மீண்டும் பானுவுடன் இணைந்திருக்கிறார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த நந்தகோபால் சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவர் விலகியதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவின் தம்பியாக கார்த்திக்கு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றி, இந்த சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது ஏற்கனவே தேன்மொழி பிஏ, நீலி போன்ற நாடகங்களில் நடித்தவர் நவீன் வெற்றி. ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொன்னால் அது தமிழும் சரஸ்வதியும் தான். துணை நடிகராகவே நடித்து வந்த இவர் மெயின் ரோலில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television