Categories: சினிமா

நடுரோட்டில் நின்று நயன் செய்த காரியம்..நயனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட விக்னேஷ் சிவன்

வெளியிட்டது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது பணிகளில் இருந்து சற்று ஓய்வு கிடைத்ததால் அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அவர்கள் தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்காக சென்றிருந்தனர். பின்னர் மீண்டும் இருவரும் சென்னை திரும்பினர். சென்னை திரும்பிய பின்பு விக்னேஷ் சிவனுக்கு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சி மற்றும் இறுதி நிகழ்ச்சியை அவர் நடத்தி காட்டினார். பல கலை நிகழ்ச்சிகள் தமிழர்களின் அடையாளங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளை அவர் சிறப்பாக நடத்தி காட்டினார். இது விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நடுரோட்டில் நின்று நயன் செய்த காரியம்..நயனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்ட விக்னேஷ் சிவன் 1

அதேசமயம் நயன்தாராவும் தன்னுடைய முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தமிழ் இயக்குனர் அட்லி இயக்க, ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதால் நயன்தாராவிற்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது பணியில் இருந்து சற்று விலகி ஓய்விற்காக சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு பார்சிலோனா விற்கு சென்றுள்ளனர். அங்கு செல்வதற்கு முன்பாக விமானத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் பார்சிலோனாவின் தெருக்களில் இருவரும் ரொமான்ஸ் செய்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியிருந்தது.

தற்போது மீண்டும் நயன்தாராவின் வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அங்கு நயன்தாரா பார்சிலோனாவில் ஒரு வீதியில் டிரம்ஸ் கலைஞர் ஒருவர் இசை வாசித்துக் கொண்டிருக்க, அந்த இசையை நின்று ரசித்துக் கொண்டிருக்கிறார். ஆட்கள் நடமாடும் அதிகம் நடமாடும் உள்ள ஒரு பகுதியில் ஒரு ஓரத்தில் ஐரோப்பிய இசைக்கலைஞர் அமர்ந்து டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்க, அதை நின்று ரசித்தார். நயன்தாராவை அவருக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்