நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தஞ்சை பாபநாசம் பகுதியில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்திருக்கின்றனர். அப்போது தங்களை நிம்மதியாக சாமி கும்பிட விடும்படி நயன்தாரா கடுப்பாகி கோரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தமிழின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக தனது கணவர் தயாரித்த கனெக்ட் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது முதல் ஹிந்தி படமான ஜவான் திரைப்படத்தில் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். திரைத்துறையில் பல விமர்சனங்களை பெற்று வரும் நயன்தாராஎது செய்தாலும் விமர்சனத்திற்கு உரியதாகவே மாறிவிடுகிறது. நடுவில் சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் என்ட்ரி கொடுத்து தற்போது முன்னணி நடிகையாக மாறியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில் சில நாட்களிலேயே தாங்கள் வாடகைத்தாய் முறையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்ட செய்தியை அறிவித்திருந்தனர். அன்று முதல் இன்று வரை தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து விக்கி நயன் ஜோடிகள் பதிவிட்டு வருகின்றனர். பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் என அனைத்து பண்டிகை நாட்களிலும் மகன்களின் முகத்தை மறைத்து அவர்கள் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தங்கள் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரனோல் என் சிவன் என்றும் மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் என் சிவன் என்றும் பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். இதில் என என்பது உலகின் தலைசிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் எவனும் தற்போது தஞ்சையில் உள்ள தங்களது குலதெய்வக் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக வந்திருக்கின்றனர். விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேல்வளத்தூரில் இருக்கும் காமாட்சியம்மன் கோயிலாகும். திருமணத்திற்கு முன்பு இந்த கோயிலுக்கு வந்து அவர்கள் அபிஷேகம் பூஜை என செய்திருந்தனர். தற்போது மீண்டும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர்கள் அங்கிருந்து கார் மூலமாக கோயிலுக்கு சென்றனர் . ரசிகர்கள் சிலர் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குழந்தைகள் பிறந்த பிறகு முதல் முறையாக குலதெய்வக் கோயிலுக்கு வருகை தந்திருக்கிறார் நயன்தாரா. அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் சாமி கும்பிடும் பொழுது அனைவரும் சூழ்ந்து கொண்டு தொந்தரவு செய்ததால் நிம்மதியாக சாமி கும்பிட விடுமாறு நயன்தாரா கடுப்பாகி கூறி இருக்கிறார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Puthiyathalaimurai TV