Categories: சினிமா

மகள் உடம்புக்குள் புகுந்த பேயை விரட்டினாரா நயன்தாரா.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கனெக்ட். இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்திருக்கும் முதல் பேய் படம் இதுவாகும். குடும்ப கதையை மையமாகக் கொண்டும், அந்த குடும்பத்திற்குள் பேய் நுழைந்தால் என்ன நடக்கும் என்பது குறித்த படம்தான் கனெக்ட். லாக் டவுன் சமயத்தில் தன் மகளுக்குள் நுழைந்த பேயை நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பது தான் இந்த படத்தின் ஒன் லைன். மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கி தமிழிலும் ஹாலிவுட் தரத்தில் பேய் படங்களை இயக்க முடியும் என்று நிரூபித்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். அவர் தயாரிப்பில் தற்போது இரண்டாவது முறையாக நயன்தாரா இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார். தற்போது இந்த படம் குறித்த முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

மகள் உடம்புக்குள் புகுந்த பேயை விரட்டினாரா நயன்தாரா.? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5) 1
ஒரு அழகான கிறிஸ்தவ குடும்பம். மருத்துவராக இருக்கும் நயன்தாராவின் கணவர் வினய் கொரோனா சமயத்தில் முன்களப பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பாதிக்கப்படுகிறது. நயன்தாரா மற்றும் அவரது மகள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனித்தனி அறையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் ஒரு கட்டத்தில் மருத்துவரான வினய் மருத்துவமனையிலேயே தங்கி விடுகிறார் அங்கு அவர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்து போகிறார். இதனால் நயன்தாராவும் அவரது மகளும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் இறந்து போன தனது தந்தையுடன் பேசுவதற்காக மகள் அன்னா முடிவு செய்கிறார். அதனால் அவர் ஆவிகளுடன் பேசும் சூப்பர் நேச்சுரல் முறையை கையாளுகிறார். அப்போது சில விபரீதங்கள் நடக்கிறது. இதனால் நயன்தாராவின் மகள் அன்னாவின் உடலில் ஒரு பேய் புகுந்து விடுகிறது.


இந்த விஷயம் ஒரு கட்டத்தில் நயன்தாரா மற்றும் நயன்தாராவின் தந்தை சத்யராஜுக்கு தெரிய வருகிறது் லாக் டவுன் சமயம் என்பதால் வெளியிலும் போக முடியாமல் தன் மகளின் உடம்பில் இருக்கும் பேயை எப்படி விரட்டுகிறார் என்பது குறித்த படம்தான் கனெக்ட். பேயிடமிருந்து மகளை காப்பாற்றினாரா? அதற்கு நயன்தாராவின் தந்தையும் பேய் விரட்டும் மந்திரவாதியுமான அனுபம் கேர் எவ்வாறு உதவி செய்தார் என்பது குறித்த படம்தான் இந்த படம். இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக அன்னா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹானியா நஃபீஸ் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகளின் உடலில் இருக்கும் பேயை விரட்ட போராடும் சூசன் கதாபாத்திரத்தில் நயன்தாரா தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம் போல் சத்யராஜும் தனது நடிப்பு திறமையால் பலரைக் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அனுபம் கேர் முக பாவனையிலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இதில் நயன்தாராவின் மகளாக நடிக்கும் ஹானிபா நஃபீஸின் நடிப்பு பாராட்டத்தக்கது. இசை மீது ஆர்வம் கொண்ட அமைதியான மகளாக இருக்கும் அவர், பேய் பிடித்த பின்பு தனது குணத்தையே மாற்றிக் கொள்கிறார் .இந்த மாற்றம் பல இடங்களில் நமக்கே பயத்தை உண்டு பண்ணுகிறது. பேய் பிடித்த பின்பு ஆழமான கதாபாத்திரத்தையும் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஹானிபா. வழக்கம்போல் நயன்தாரா சிங்கிள் மதர் ஆக இருந்து பேய் பிடித்த தனது மகளுடன் போராடும் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதத்தில் நம்பிக்கை கொண்ட சத்யராஜும் தனது பேத்தியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். ஆன்லைனில் ஹீலிங் கொடுக்கும் அனுபம் கேர் முகபாவனைகளிலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு நிமிடமும் திகிலூட்டும் வண்ணம் இந்த படம் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

படத்தில் பாசிட்டிவ் விஷயங்கள்:
  1. ஹாலிவுட் தரத்திற்கு இணையான திரில்லிங் காட்சிகள், ஹாரர் மூவி என்பதை நியாயப்படுத்தும் விதமாக திகில் அமைந்த காட்சிகள்.
  2. சாந்தமான மகளாகவும் பேய் பிடித்த பின்பு வேறு மாதிரியான நம்மையே பயமுறுத்தும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ள ஹானிபா நஃபிஸின் சிறந்த நடிப்பு.
  3. 99 நிமிடங்கள் என்றாலும் இருக்கை நுனியில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதை யூகிக்க முடியாத வண்ணம் நிமிடத்திற்கு நிமிடம் ஆர்வமூட்டும் காட்சிகள், சிறந்த மேக்கிங், ஸ்கீரின் ப்ளே்
  4. பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. குறிப்பாக லாக் டவுன் என்பதால் வீடியோ கால் Buffering ஆகும்போது அடுத்து என்ன நடக்குமோ என்கிற திகில் பின்னணி இசையுடன் பார்க்கும் பொழுது உண்மையிலேயே வேறு லெவலில் இருக்கிறது.

படத்தில் நெகட்டிவ் விஷயங்கள்:

மாயா, கேம் ஓவர் போன்ற படங்களில் இயக்குனர் வித்தியாசமான கதையை கையாண்டுருப்பார். இறுதியில் அந்த சஸ்பென்ஸ் உடைந்து நமக்கே வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த படத்தில் எந்த வித்தியாசமான அனுபவம் இல்லை. பேய் படங்களுக்கே உரித்தான கிளைமாக்ஸ் தான். பேய் பிடிப்பதும் அதை பேயை ஓட்டுவதும் தான் இந்த கதையின் கருவாக இருக்கிறது. இருந்தபோதிலும் லாக்டவுன் சமயத்தில் வெளியில் செல்ல முடியாத நிலையில் ஒருவருக்கு பேய் பிடித்தால் என்ன நடக்கும் என்பதை வித்தியாசமாக காட்டி இருப்பதால் இந்த படத்தை திரை அனுபவத்திற்காக ஒருமுறை சென்று படத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3/5

Youtube Video Code Embed Credits: Rowdy Pictures

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்