Categories: சினிமா

குலை நடுங்க வைக்கும் “கனெக்ட்” படத்தின் டீசர்.! நயனின் பிறந்தநாளில் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

வெளியிட்டது

நயன்தாரா தற்போது நடித்து வரும் பேய் படமான கனெக்ட் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு முன்னர் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளனாகவும் வேலை பார்த்து வந்தார். டீஸர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குலை நடுங்க வைக்கும் "கனெக்ட்" படத்தின் டீசர்.! நயனின் பிறந்தநாளில் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! 1

தற்போது தனது கணவர் தயாரிப்பில் கனெக்ட் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து சத்யராஜ், நடிகர் வினய், அனுபம் கேர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அஸ்வின் சரவணன் இந்த படத்தை. திரில்லர் ஜானரில் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே மாயா படத்தில் திரில்லர் ஜானரில் நயன்தாரா நடித்திருக்கிறார். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் உடன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா மண்டியிட்டு இயேசுவிடம் மன்னிப்பு கேட்பது போல் இருக்கும் புதிய போஸ்டர் வெளியாகி இருந்தது. தற்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Rowdy Pictures

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்