Categories: சினிமா

அடேய் நிம்மதியா ஆட விடுங்க டா.! நடுவில் steps-ஐ மறந்து விழுந்து விழுந்து சிரித்த நயன்தாரா.!

வெளியிட்டது

நடிகை நயன்தாரா தற்போது நடனமாடும் போது ஸ்டெப்ஸை மறந்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை நயன்தாராவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் திரைக்கு வந்து 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது அவர் தமிழில் கனெக்ட் என்கிற ஒரு பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடேய் நிம்மதியா ஆட விடுங்க டா.! நடுவில் steps-ஐ மறந்து விழுந்து விழுந்து சிரித்த நயன்தாரா.! 1

 

சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நயன்தாரா சமூக வலைதள பக்கங்களில் அப்போது சில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவருக்கு என்று தனியாக சமூக வலைத்தள கணக்குகள் இல்லை. தனது கணவரான விக்னேஷ் சிவனின் கணக்குகளை பயன்படுத்தி அவர் புகைப்படங்களை அல்லது வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் நயன்தாரா பற்றிய ஒரு தகவல் சமீப காலமாக பரவி வருகிறது. அதில் தனது இரட்டை குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக அவர் சில நாட்கள் நடிப்பிலிருந்து விலக இருப்பதாகவும், ஒரு வருட காலத்திற்குப் பின்னர் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. விரைவில் இது குறித்து நயன்தாரா அறிவிப்பார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நயன்தாராவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா நடனம் ஆடுவதற்காக நின்று கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு உடன் ஆடுபவர்கள் வந்து நடனத்தை தொடங்க, நடனத்தை steps-ஐ மறந்து அப்படியே நின்று விடுகிறார். பின்னர் தன்னை மறந்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். அந்த காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர் நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்