தமிழின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தனது காதலரான விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா. சென்னையில் மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் திரையுலகின் பல முண்ணனி நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் நேரில் வந்து வாழ்த்தினர். அதன் பிறகு விக்னேஷ் சிவன் தற்போது படங்கள் சூட்டிங்கிலும், செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு சூட்டிங்கிலும் பிஸியாக இருக்கிறார். நடிகை நயன்தாராவும் தனது முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் மும்பை மற்றும் டெல்லிக்கு அடிக்கடி சென்று வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்து வருகிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 75 படங்களுக்கு மேல் நடித்த பெருமையை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனுன் மிக சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். நேற்றுதான் இவர்களின் திருமண வீடியோ குறித்த ஒரு டீசரை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும், திருமண வீடியோ வெளியிடப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். விரைவில் அவர்களின் திருமண வீடியோவை வெளியிட இருப்பதாக நேற்று ஒரு டீசரை வெளியிட்டு இருந்தது. இதனால் நயன்தாராவின் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நயன்தாராவுக்கு உடல்நலம் சரியில்லை என்ற செய்தியால் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நயன்தாரா அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவர் விக்னேஷ் சிவன் சமைத்துக் கொடுத்த உணவை சாப்பிட்ட நயன்தாரா, தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.