நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடைசியாக தனது கணவர் விக்னேஷ் சிவன் நடிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்து இருந்தார். லாக்டவுன் சமயத்தில் இறந்து போன தனது தந்தையுடன் பேச நினைக்கும் நயன்தாராவின் மகளுக்கு பேய் பிடித்து விடுகிறது. அப்போது வெளியிலும் செல்ல முடியாமல், எப்படி பேய் ஓட்டுவது என்று தெரியாமல் நயன்தாரா கஷ்டப்படும் காட்சிகளை மிக அழகாக எடுத்துக் காட்டியிருந்த படம் தான் கனெக்ட். இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இரண்டு வாரங்களாக நல்ல வசூலையும் குவித்து வருகிறது.

இந்த நிலையில் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து கணவருக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர், இந்த ஆண்டு மனநிறைவான ஒரு ஆண்டாக இருக்கிறது. சினிமாவை விரும்பும் நபர்களுக்கு நான் மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மற்றும் கனெக்ட் படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுத்த எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒரு ஷோவை பார்த்து முடித்த பின்பு மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு பெரிய நன்றிகள், என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தீர்கள், நீங்கள் படம் இயக்கும் திறமை உலக அளவில் தரமானது. உங்கள் படங்களில் நடிப்பதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனுக்கு என்னுடைய காதலையும், நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தை அடுத்த மைல் கல்லுக்கு எடுத்துச் சென்று இருக்கிறீர்கள், இந்த படத்தை தயாரித்தற்கும், விநியோகம் செய்ததற்கும் மிக்க நன்றிகள். உங்கள் அனைவரின் அன்பு, காதல், ஆதரவு, விமர்சனங்கள் என அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறோம். இதையெல்லாம் படிப்பிணையாக எடுத்துக் கொண்டு வருங்காலத்தில் நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்கிறோம். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. அளவில்லாத காதலை என் மீது பொழிவதற்காக, அனைவருக்கும் மகிழ்ச்சியான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கையொப்பமிட்டு அந்த அறிக்கையை அவர் பகிர்ந்து இருக்கிறார். நயன்தாராவின் ரசிகர்கள் அந்த அறிக்கையை பகிர்ந்து வருகின்றனர்.