இதுவரை நடித்திராத புதிய கெட்டப்பில் நடிக்கும் நயன்தாரா! வெளியான சூப்பர் அப்டேட்

வெளியிட்டது

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த , நெற்றிக்கண், காதுவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்மணியாக நடிக்கிறார் நயன்தாரா.

இதுவரை நடித்திராத புதிய கெட்டப்பில் நடிக்கும் நயன்தாரா! வெளியான சூப்பர் அப்டேட் 1

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படத்தில் நயனதாரா இதுவரை நடித்திராத வக்கீல் கெட்டப்பில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் தான் நடித்து வருகிறார். அந்த வரிசையில் முதல் முறையாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் நயன்தாரா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்