விக்கி பயமா இருக்குடா..! யானையை பார்த்து பயந்து விக்னேஷிடம் ஓடிய நயன்தாரா | Nayanthara

வெளியிட்டது

இன்று காலை முதலே இணையத்தை கலக்கி வரும் ஒரு செய்தி நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றது தான். அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விக்னேஷ் சிவன், வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உத்தரவு கேட்டு வந்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தார். இதனால் திருமண உத்தரவை கேட்டுத்தான் இருவரும் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள் என்ற பேச்சு எழத் தொடங்கியது. ஏற்கனவே வருகிற ஜீன் மாதம் இருவருக்கும் திருமணம் என்ற பேச்சுக்கள் உள்ள நிலையில் இன்று இருவரும் குல தெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளது இந்த தகவலை உறுதிபடுத்தும் வண்ணம் உள்ளது. வீடியோ கீழே உள்ளது..

விக்கி பயமா இருக்குடா..! யானையை பார்த்து பயந்து விக்னேஷிடம் ஓடிய நயன்தாரா | Nayanthara 1

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அன்று தொடங்கி இன்று வரை இணைபிரியாமல் தமிழ் திரையுலகில் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இதனால் இருவருக்கும் எப்போது கல்யாணம் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். வருகின்ற ஜூன் 9ம் தேதி திருப்பதியில் வைத்து கல்யாணமும், அதைத்தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பும் வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Youtube Video Code Embed Credits: Polimer

அதன் முன்னோட்டமாகவே இன்று இருவரும் குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர் என்று பேசப்படுகிறது. இங்கு வழிபாடு முடித்துவிட்டு நேரே கும்பகோணம் சென்ற இருவரும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். அப்போது அங்கு இருந்த கோவில் யானைக்கு பழம் கொடுக்க பயந்து நயன்தாரா பாகனிடமே அண்ணா நீங்களே கொடுங்கள் என்று கூற பாகன் மீண்டும் நயன்தாராவிடமே பழத்தை கொடுக்கிறார். இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் நீ கொடு என்று சொல்ல அதை விக்கி வாங்கி யானையிடம் கொடுக்கிறார். க்யூட்டாக உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதை நீங்களும் காண..Watch the below video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்