குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திருச்சியில் இருந்து ரயில் மூலமாக சென்னை திரும்பிய நயன்தாரா ரசிகர் ஒருவரிடம் கோபமாக பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று காலை சென்னையிலிருந்து விமான மூலமாக திருச்சிக்கு சென்றார். பின்பு அங்கிருந்து கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். நயன்தாரா அங்கு வரும் செய்தி அறிந்த ஊர் மக்கள் சிறிது நேரத்தில் திரளாக திறந்து விட்டதால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது் மேலும் கோவிலுக்கு உள்ளே சென்ற நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்காக செய்தியாளர்களும் அங்கு சூழ்ந்திருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விக்னேஷ் சிவன் அங்கு இருந்தவர்களிடம் சற்று அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பம் நிலவியதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்தியாளர்கள் சாமி கும்பிடுவது போல போட்டோ எடுப்பதற்காக நயன்தாராவை அழைத்துக் கொண்டே இருந்தனர். இதனால் கடுப்பான நயன்தாரா சாமி கும்பிட தான் வந்தோம் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருங்கள், தயவு செய்து சாமி கும்பிட விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர் இருவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு கும்பகோணத்தில் இருக்கும் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். அங்கு 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு இருந்ததால் கோவிலின் பிரதான கதவு நயன்தாராவிற்காக திறக்கப்பட்டு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவிகள் சிலர் நயன்தாராவை தோளை தொட்டு கூப்பிட்டதால் நயன்தாரா டென்ஷன் ஆனார். பின்னர் காரில் ஏறி திருச்சி சென்ற நயன்தாரா ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் வருவதை அறிந்து கொண்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர்.
மேலும் நயன்தாரா ரயிலில் ஏறிய போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நயன்தாரா டென்ஷன் ஆகி, போட்டோ எடுத்தா போனை உடைத்து விடுவேன் என்று கோபத்தில் கத்தினார். இதனால் அந்த ரசிகர் உடனடியாக வீடியோ எடுப்பதை நிறுத்தினார். தொடர்ந்து நயன்தாராவின் அனுமதி இல்லாமல் அவரிடம் ஃபோனை நீட்டிக்கொண்டு செல்பிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நிதானத்தை இழந்த நயன்தாரா மூஞ்சியை சிடுசிடுவென வைத்துக்கொண்டு அனைவரிடமும் எறிந்து எறிந்து விடத் தொடங்கினார். பின்னர் ரயிலில் ஏறி பயணம் செய்த அவர்கள் சென்னைக்கு சென்றடைந்தனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Polimer News