நயன்தாரா நடித்திருக்கும் கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள திரையரங்கிற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஹாலிவுட் ஹீரோயின் போல உடை அணிந்து கொண்டு ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டு செம ஸ்டைல் ஆக நயன்தாரா என்ட்ரி கொடுத்தார். நயன்தாரா 2005 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் நடித்து வருகிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 75 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். தனது திறமையான நடிப்பால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா. அந்த வகையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் தான் கனெக்ட். இந்த படம் பேய் படமாக உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நயன்தாரா மாயா என்கிற பேய் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருந்தது. நயன்தாரா எப்போதும் போல் இல்லாமல் பேய் படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது மீண்டும் அதே இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் இணைந்து கனெக்ட் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக வினய் நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், அனுப்பம் கேர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் அனைத்தும் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் 99 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் இடைவெளி இல்லாமல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது. நாளை மறுநாள் படம் வெளியாக உள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழகமெங்கும் படம் வெளியாக இருக்கிறது. இதற்காக பிரமோஷன் பணிகளில் படக் குழுவும் நயன்தாராவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ சென்னையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் ஏராளமானவர் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகை போல செம ஸ்டைலாக எழுதி கொடுத்தார் நயன்தாரா. மேலும் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது அங்கு ஒருவர் ஐ லவ் யூ மேம் என்று சொன்னதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Kolly Infos